உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

வேர்ச்சொற் கட்டுரைகள்

நொறுவை- நொறுகை. நொறுவை- நொறுவல். நொறுநொறுத்தல் = உடைந்து நொறுங்குந் தன்மையாதல். நொறுநொறெனல் = நொறுங்குதற் குறிப்பு.

=

நொறு நாட்டியம் 1. விறலுஞ் சுவையுந் தோன்ற நடிக்கும் நுண்வினைநடம். 2. பொருட்படுத்தத்தகாத மிகச்சிறு குற்றங்களைக் கூறுந் தன்மை. 3. துப்புரவு, சுவை, ஒழுக்கம் முதலியவற்றில் அளவிற்கு மிஞ்சிக் கவனஞ் செலுத்துதல்.

நடி - நடம் - நட்டம் - வ. நாட்ய (நாட்டியம்).

நுள்- நொள் - நொய் = 1. அரிசி நொறுக்கு (திவா.). 2. நுண்மை. 3. மென்மை. 4. நொய்ம்மை.

நொய்ம்மை = 1. சிறுமை, நுண்மை. 2. மென்மை. 3. கனமின்மை. “மெய்ம்மை சீர்மை நொய்மை வடிவம்” (மணிமே. 27: 254).

நொய்ய = 1. நுட்பமான. “பல்கல நொய்ய மெய்யணிந்து” (சீவக. 991). 2. மென்மையான, “அனிச்சப் போதி னதிகமு நொய்ய” (கம்பரா. கோலங். 14). 3. வலியற்ற, நொய்ய கூற்று. 4. புன்மையான. “நொய்தி னொய்யசொல்” (கம்பரா. பாயி. 5). 5. வசையான. நொய்ய சொற் பொறாதவன்(W.).

நொள்- நோள்- நோட்கு- நோக்கு.

ஒ. நோ.: கொள் - கொள்கு - கொட்கு கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவை. கொட்கு - கொட்கி - கொக்கி.

நோக்குதல் = 1. கூர்ந்து பார்த்தல். "நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்” (குறள். 1081). 2. சிறப்பாய்க் கருதுதல். “அறனோக்கி யாற்றுங்கொல் வையம்” (குறள். 189). 3. கவனித்தல். “நச்சாமை நோக்காமை நன்று” (ஏலாதி, 12). 4. கவனித்துத் திருத்துதல். “புனையிழை நோக்கியும்” (கலித். 76). 5. பாதுகாத்தல். "நோக்காது நோக்கி” (சி.போ. 1: 4, வெண். ப. 79). 6. கவனித்துச் செய்தல். “இவற்றை மும்மைசேர் யாண்டு நோக்கு” (திருவாலவா. 31: 15).

ம.நோக்குக.

நோக்கு = 1. கூர்ந்து நோக்கிச் சிறப்புப் பொருள் காணுமாறு அமைக்கும் எழுத்துஞ் சொல்லுமான செய்யுளுறுப்பு.

"மாத்திரை முதலா அடிநிலை காறும்

நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே. (தொல். செய். 103)