உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல்' என்னும் வேர்ச்சொல்

11

2. கருத்தோடு கூடிய பார்வை. “செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்” (நாலடி. 298). 3. சிறப்பாகப் பார்த்தற்கேற்ற அழகு. “நோக்கு விளங்க” (மதுரைக். 13). 4. சிறந்த கருத்து. “நூலவர் நோக்கு” (திரிகடு. 29). 5. கூரிய அறிவு. "நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞர்” (மதுரைக். 517). 6. சிறப்பாகக் கருதற்கேற்ற பெருமை. “நோக்கிழந்தனர் வானவ ரெங்களால்” (கம்பரா. கும்பக. 328). 7. சிறந்த நடை. “சொன்னோக்கும் பொருணோக்கும்” (அஷ்டப். திருவரங்கக். தனியன், 2). 8. வேடிக்கைக் கூத்துக்களுள் ஒன்று (சிலப். 3 : 12, உரை). 9. நோக்குங் கண். "மலர்ந்த நோக்கின்” (பதிற். 65:7).

ம.நோக்கு.

நோக்கு - நோக்கம். ம. நோக்கம்.

நோள்- நோடு. நோடுதல் = ஆய்ந்து பார்த்தல். இவ் வினை இன்று வழக்கற்றது. க.நோடு.

நோடு- நோட்டம் = 1. பொன் வெள்ளிக் காசு பண ஆய்வு. 2. பொன்மணி ஆய்வு. 3. விலைமதிப்பு. ம. நோட்டம், கு. நோட்ட.

நோட்டம் பார்த்தல் = 1. விலைமதிப்பறிதல். 2. நிலைமையாய்தல். 3. வேவு பார்த்தல். நோட்டம் பார்க்க வந்திருக்கிறான் (உ.வ.).

நோட்டம்- நோட்டன் = நோட்டஞ் செய்வோன்.

நோட்டக்காரன் = 1. காசாயும் வண்ணக்கன். "நோட்டக் காரர் நெஞ்சடையக் கூப்பிடுவது" (பணவிடு. 182). 2. பொன்மணி ஆய்வோன்.

ம. நோட்டக்காரன், க. நோட்டகார (g).

6

நோடு-நாடு. நாடுதல் = 1. ஆராய்தல். "நாடாது நட்டலிற் கேடில்லை” (குறள். 791). 2. தேடுதல். “தனக்குத்தாய் நாடியே சென்றாள்” (நாலடி.15). 3. தெரிதல். முன்னவனிதனை நாடி " (கந்தபு. ததீசியு. 32). 4. விரும்புதல். "நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்” (பதிற். 86 : 7). 5. விரும்பிக் கிட்டுதல். இனி இங்கு நாடமாட்டான் (உ.வ.). ம. நாடுக, து. நாடுனி.

நாடு - நாட்டம் = 1. சிறப்பு நோக்கு. "நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்.”

(தொல். களவு. 5)