உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல் (துளைத்தற் கருத்துவேர்)

15

நானாழி” (மூதுரை, 19). 3. நாழிகை வட்டில். 4. நாழிகை வட்டிலால் அறியப்படும் நேர அளவு (24 நிமையம்) (பிங்.). 5. நெசவுக் குழல். 6. அம்பறாத் தூணி. “ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி" (பரிபா.18 : 30). 7. நாழி வடிவான நாண்மீன் (பூரட்டாதி), (பிங்.).

ம., க.நாழி.

நாழி - வ. நாடி.

கைந்நாழி = சிறுநாழி.

நாழி - நாழிகை = 1. நாழிகை வட்டில். 2. நாழிகை வட்டிலால் அறியப்படும் நேர அளவு (24 நிமையம்). “உயிர்த்தில னொரு நாழிகை” (கம்பரா. பிரமா. 200). 3. தெய்வப்படிமை யிருக்கும் சிற்றறை. 4. நாடா. “செய்யு நுண்ணூல் நாழிகையி னிரம்பா நின்று சுழல்வாரே” (சீவக. 3019). ம.நாழிக க. நாளிகே (g).

நாழிகை- வ. நாடிகா.

உண்ணாழிகை (திருவுண்ணாழிகை) = கருவறை.

=

நாழி - நாடி 1. அரத்தக்குழாய். 2. ஊதை பித்த கோழை காட்டும் தாது நரம்பு. "மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்” (திருப்பு. 918). 3. இடை, பிங்கலை, சுழிமுனை யென்னும் மூச்சுக் குழாய்கள். 4. உட்டுளை யுள்ளது (அரு. நி.). 5. பூவின் தாள் (யாழ். அக.). 6. நாழிகை (24 நிமையம்). 7. யாழ் நரம்பு. நாடி- வ. நாடி.

நாடி - நாடா = 1. நெசவுக் குழல். “தார் கிடக்கும் நாடாப் போல மறுகுவர்” (சீவக. 3019, உரை). 2. ஆடைக் கரையில் வைத்துத் தைக்கும் பட்டி (ribbon). நாடா-உ.நாரா.

நாளம் - நாணல் = 1. உட்டுளையுள்ள தட்டைவகை. 2. கரும்பு

வகை.

நுள் - நுழு - நுகு - நுங்கு. நுங்குதல் = 1. விழுங்குதல் (துளை போன்ற வாய்க்குளிட்டு உட்கொள்ளல்). 2. உட்கொள்ளல் "மகரவாய் நுங்கிய சிகழிகை” (கலித்.). 3. வயிறாரப் பகுகுதல். 'நூறுநூறு குடங்களு நுங்கினான்.” (கம்பரா. கும்ப. 60).

க.நுங்கு.

நுங்கு - நொங்கு. நொங்குதல் = விழுங்குதல். “திங்களிருள் நொங்க” (தேவா. 1157: 3).

ம. நொங்ஙு.