உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

வேர்ச்சொற் கட்டுரைகள்

நள் - நண் - நடு = 1. உள்ளிடம். “நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று” (குறள். 1008). 2. உள்ளுறைவோனான இறைவன். “கெடுவில் கேள்வியுள் நடுவா குதலும் " (பரிபா. 2: 25). 3. வானத்தின் உச்சி. 'காலைக் கதிரோன் நடுவுற்றதொர் வெம்மை காட்டி” (கம்பரா. நகர் நீங்கு. 123). 4. அகடு (மையம்). 5. இடுப்பு. “நடுங்க நுடங்கும் நடுவு” (திருக்கோ. 31). 6. இடைப்பட்டது. 7. நடுநிலை. “நடுவாக நன்றிக்கட் டங்கியான்” (குறள். 117). 8. நயன்மை (நீதி).

-

ம.க.,து.நடு, தெ. நடுமு.

நடு-நடுவு - நடுவண் = அகடு, இடை.

நடு - நாடு = 1. முல்லைக்கும் நெய்தற்கும் இடைப்பட்ட மருத நிலம். "நாடிடை யிட்டும் காடிடை யிட்டும்” (சிலப். 8 : 61, அரும்.). 2 மக்கள் வாழும் இடம். 3. தேசம். எ -டு : ஆங்கில நாடு. 4. தேசப் பகுதி. எ டு : பாண்டிநாடு. 5. ஊர். எ-டு : கூறைநாடு. 6. சிற்றூர் (நாட்டுப்புறம்). 7. அரசியம். 8. உலகம். “புலத்தலிற் புத்தேள்நாடுண்டோ” (குறள். 1323). 9. இடம்."ஈமநாட் டிடையி ராமல்” (கம்பரா. இலங்கை தே. 45). 10. ஒரு பேரெண் (பிங்.).

ம.,தெ.,க.,து. நாடு.

ஒ.நோ:

“வட்ட வரிய செம்பொறிச் சேவல் ஏனல் காப்போ ருணர்த்திய கூவும் கானத் தோர்நின் தெவ்வர் நீயே புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர் புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப் பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்த ராடுகளங் கடுக்கும் அகநாட் டையே”

(புறம்.28)

அகம் = 1. உள். 2. உள்ளிடம். 3. மருதநிலம். “ஆலைக் கரும்பினகநா டணைந்தான்” (சீவக. 1613).

நாடு-நாடன்- நாடான்- நாடார்.

நாடு - நாட்டான்- நாட்டார்.

நள்- நாள்- நாளம் = 1. உட்டுளை (சூடா.). "கழுநீர் நாளத் தாளினா லொருத்தி யுண்டாள்” (இராமநா. உண்டாட். 19). 2. உட்டுளையுள்ள தண்டு. “கமல நாளத்திடை” (கம்பரா. மிதிலைக். 75). 3. நரம்பு. நாளம்-

வ.நால்.

=

நாளம் - நாளி - நாழி = 1. உட்டுளைப் பொருள் (பிங்.). 2. ஒரு படி. "நாழி நவைதீ ருலகெலாம்” (கம்பரா. சரபங்க. 29). “நாழி முகவாது