உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஒரு பகுதி

தென்னை இயற்கையாகத் தோன்றிய நிலம் குமரிநாடு. குமரிக் கண்டத் தென்பாக நாற்பத்தொன்பது நாடுகளுள் ஏழ்தெங்கநாடு. தென்னை தென்கோடியில் தோன்றியதனாலேயே, தென்றிசை அதனாற் பெயர் பெற்றது.

தென்னுதல் - கோணுதல், சாய்தல். இயல்பாகக் கோணுவத னாலேயே முடத்தெங்கு என்னும் அடைமுதற்சொல் எழுந்தது.

தென்- தென்னை. தென்- தென்கு- தெங்கு. தென் = தெற்கு. தென் + கு தெற்கு. ஒ.நோ: வடக்கு (வடம் +கு), கிழக்கு (கீழ் + கு), மேற்கு (மேல் + கு).

தென்னைக்கு நெய்தல்நிலம் மிக ஏற்றதாதலால், நெய்தல் மிக்க சேரநாட்டில் தென்னை தொன்றுதொட்டுச் சிறப்பாகச் செழித்தோங்கி வளர்கின்றது. தீயர் (தீவார்) இலங்கையினின்று வந்தவரேனும், தென்னை குமரிநாட்டுத் தொடர்புடையது.

அரிசி அல்லது நெல்லளக்கும் படி முதன்முதல் மூங்கிற் குழாயாலேயே அமைந்தது.

நுள் - நள் - நாள் - நாளம் = உட்டுளை, உட்டுளைப் பொருள், தண்டு.

நாளம் - நாளி = உட்டுளையுள்ள மூங்கில், புறக்காழது.

நாளி - நாழி = மூங்கிற்படி, படி.

"புறக்கா ழனவே புல்லென மொழிப

மரபு. 86)

என்னும் தொல்காப்பிய மரபியல் நூற்பாவால் தென்னையும் மூங்கிலொடு சேர்ந்து நாளியினமாம்.

வேந்தன் குடிப்பெயரினின்று அவன் நாட்டுப் பெயர் திரிவதுண்டு.

-

டு:பாண்டியன் - பாண்டியம் = பாண்டிநாடு. இம் முறைப்படி, சேரலன் - சேரலம், சேரன் - சேரம் என்று திரியும்.

தென்மொழிச்சகரம் வடமொழியிற் ககரமாகத் திரிவதால், சேரலம் கேரள(ம்), சேரம் - கேர(ம்) என்றாம்.

ஆகவே, நாலிகேர என்பது, சேரநாட்டில் சிறப்பாக வளரும் மூங்கிலொத்த புறக்காழ்த் தென்னை என்று பொருள்படலாம். (வடமொழியிற் சொன்முறை மாறும்).

நாலிகேர என்பது, தமிழில் நாளிகேரம் என்னும் வடிவே கொள்ளும்.