உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல்' (ஒளிர்தற் கருத்துவேர்)

25

நங்கு காட்டுதல், நங்கு வலித்தல் என்பன ஒக்க நடித்து நையாண்டி செய்தலைக் குறிக்கும் வழக்குச் சொற்கள்.

நகு நகர் = 1. விளங்கித் தோன்றும் மாளிகை. "பாழி யன்ன கடியுடை வியனகர்” (அகம். 15). 2. வளமனை. 'கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்” (புறம். 70). 3. அரண்மனை. "நிதி துஞ்சு வியனகர்” (சிலப். 27 : 200). 4. சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபம். “அணிநகர் முன்னி னானே" (சீவக. 701). 5. இல்லத்தில் வாழும் மனைவி. “தன்னகர் விழையக் கூடி” (கலித். 8). 6. அரண்மனை யொத்த கோவில். "முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே” (புறம். 6). 7. மாளிகையும் அரண்மனையும் மண்டபமும் கோயிலும் போன்ற கட்டடங்களாற் சிறந்து விளங்கும் ஊர். “நெடுநகர் வினைபுனை நல்லில்” (புறம். 23). தெ. நகரு.

=

நகர் - நகரி = சிறந்து விளங்கும் கட்டடங்களையுடைய ஊர். நகரி- வ. நகரீ. 'இ' சினைமுதலீறு.

நகர் - நகரம் = 1. பெருமாளிகை. 2. பெரிய அரண்மனை. 3. பெருங்கோயில். "மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்” (சிலப். 14 : 9). 4. வாழிடம். “நகர மருள்புரிந்து நான்முகற்குப் பூமேல்” (திவ். இயற். முதற். 33). 5. மாநகர், பேரூர் (சூடா.).

‘அம்' பெருமைப்பொருட் பின்னொட்டு. இற்றைத் தமிழர் அதை அறியாது பொதுப்பொருளில் வழங்குகின்றனர்.

நகரம் - வ. நகர.

நகர் என்னும் மூலச் சொல்லும், அதன் நகு என்னும் மூலமும், மொழியில் இல்லை. தமிழை வடமொழி யென்னும் சமற்கிருதக் கிளையாகக் காட்டலையே குறிக்கோளாகக் கொண்டு, தமிழ்ப் பகைவரான பிராமணத் தமிழ்ப்புலவர் தொகுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலியில், நகர் நகரி நகரம் ஆகிய மூவடிவுச் சொல்லும் வடசொல்லாகவே காட்டப்பட்டுள்ளன. நாம் “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்னும் உயர்ந்த பண்பாட்டை யுடையவரேனும், நாட்டு வரலாறொத்த மொழிவரலாற்றைச் சிதைப்பதும், உலகில் முதன்முதல் நாகரிக விளக்கேற்றிய நம் முன்னோரைத் தகவிலாரெனக் காட்டுவதும், அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தேடி வைத்த அருஞ்செல்வத்தைப் போற்றாது வாரி வாரியில் எறிவதும்,

அறியாமையையோ, அடிமை மனப்பான்மையையோ, இறக்க இழிந்த தன்னலத்தையோ, படுகோழைத்தனத்தையோ, தமிழைப் பகைவர்க்கு வெளிப்படை யாகக் காட்டிக்கொடுக்கும் நாணமில்லாச் செயலையோதான் காட்டும். பண்பாடு வேறு; காட்டிக்கொடுப்பு வேறு.