உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

வேர்ச்சொற் கட்டுரைகள்

மக்களின் பழக்கவழக்கங்கள் முதன்முதல் நகர் அல்லது நகரத்திலேயே திருந்தின. அதனால், சிற்றூர் வாணனையோ நாகரிகமில்லாதவனையோ நாட்டுப்புறத்தான் என்று இழித்துக் கூறுவது இன்றும் வழக்கமா யிருக்கின்றது. வாழ்க்கைத் திருத்தம் அல்லது பண்பாடு நகரத்தில் தோன்றியதானாலேயே, நாகரிகம் என்னும் பெயர்த்தாயிற்று.

நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம்.

நகரிப் பழக்கம் = நகர்வாணரின் திருந்திய ஒழுக்கம்.

நகர்ப்புறத்தான் (நாகரிகன்) x நாட்டுப்புறத்தான் அல்லது பட்டிக்காட்டான் = திருந்தாத பழக்கவழக்கத்தான்.

ஒ.நோ: E. urban = living in a city or town, urban = polite, urbanity polished manners.

=

L. civis = = citizen, civil = polite, civilization = advanced stage in social development.

முதற்கண் நகரங்களில் வழங்கியதனாலேயே, இற்றை வடமொழி யெழுத்து நாகரி யெனப்பட்டது. வடமொழி தேவமொழி யென்னும் ஏமாற்றினால், அது தேவநாகரியென வழங்கும்.