உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல் (நெகிழ்ச்சிக் கருத்துவேர்)

29

(திவ். பெரியதி. 8 : 5 : 9). 2. மனமிரங்குதல். 3. காதலால் உருகுதல். "என்புநெகப் பிரிந்தோன்" (தொல். களவு. 23). 4. கரைதல். 5. பொடியாதல். 6. கெடுதல். “மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது” (சீவக. 426).

நெகு- நெக்கு = நெகிழ்ச்சி.

நெக்கவிடுதல் = 1. பொருத்துவாய் விடுதல். 2. பிளத்தல்.

நெட்டிருப்புப்

(நல்வழி, 83)

பாருக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்”

நெகு- நெக்கல் = 1. தளர்ந்தது. 2. அளிந்த பழம்.

நெகு - நெகிழ். நெகிழ்தல் = 1. பிணிப்புத் தளர்தல். “கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி” (அகம். 26). 2. நழுவுதல். “எல்வளை நெகிழ்போ டும்மே” (ஐங். 20). 3. நிலைகுலைதல். “நாளினு நெகிழ்போடு நலனுட னிலையுமோ” (கலித். 17). 4. பூமலர்தல். "காவியுங் குவளையு நெகிழ்ந்து” (சூளா. நாட். 5). 5. குழைதல் (சூடா.). 6. இளகுதல். "சேவடி நோக்கி விரும்பி யுண்ணெகிழ (கூர்மபு. பிரமவிஷ்ணு. 16). 7. மனமிரங்குதல். 8. மெலிதல். “மென்றோள் நெகிழ விடல்” (கலித். 86). 9. வெட்டிற்குப் பதமாதல். 10. விட்டு நீங்குதல்.

(

நெகு- நகு-நங்கு - நாங்கு. நாங்குதல் = 1. திடங்குன்றுதல். தாங்கி நாங்கிப்போக (உ.வ. யாழ்ப்.). 2. தளர்தல்.

நாங்குளு நாங்குழு

தளர்ந்து நீண்டு இயங்கும் புழு. "நாங்குழுவை வள்ளுகிரா லெற்றாமல்" (பணவிடு. 265). நாங்குழு நாங்கூழ். “எறும்பிடை நாங்கூழெனப் புலனா லரிப்புண்டு” (திருவாச. 6 :25). நால் - நால்கு- நாகு- நாக்கு = 1. வாய்க்குள் தொங்கும் உறுப்பு. 2. படகு வலிக்குந் துடுப்பின் பலகை. 3. தீக்கொழுந்து.

நாகு - நாவு.

நாவு - நா = 1. “யாகாவா ராயினும் நாகாக்க ” (குறள். 127). 2. சொல். “நம்பி நாவினு ளுலகமெல்லாம் நடக்கும்” (சீவக. 316). 3. துலைநா. "துலைநா வன்ன சமநிலை யுளப்பட” (ஆத். பேரா. பொதுப்பாயிரம்). 4. மணிநா.'வாயிற் மணிநா. 'வாயிற் கடைமணி நடுநா நடுங்க” (சிலப். 20 : 53), 5. 20:53). தீக்கொழுந்து. “எழுநா” (பிங்.). 6. திறவுகோலின் நாக்கு. 7. இசைக்குழலின் ஊதுவாய்.

தெ. நாலுக, க. நாலகெ (g), து. நாளாயீ, ம.நாக்கு.

.