உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

வேர்ச்சொற் கட்டுரைகள்

நொள்- நொய். ஒ.நோ: தொள்- தொய். நொய்ம்மை = 1. தளர்ச்சி.

6

2. உறுதியின்மை. 3. கனமின்மை. "மெய்ம்மை சீர்மை நொய்ம்மை வடிவம்” (மணிமே. 27 : 254). 4. மென்மை. 5. மனத்திடமின்மை. 6. மனவுருக்கம். 7. வறுமை. 8. சிறுமை. 9. இழிவு.

நொய் = 1. மென்மையான. “அனிச்சப் போதி னதிகமு நொய்ய” (கம்பரா. கோலங். 14). 2. வலியற்ற. நொய்யமதி. 3. புன்மையான. "நொய்தி னொய்ய சொல்” (கம்பரா. பாயி. 5). 4. வசையான. நொய்யசொற் பொறாதவன்.

6

நொய்யவன் = புல்லன்(அற்பன்). "நொய்யவ ரென்பவர்வெய்யவ ராவர்” (கொன்றை. 57). நொய்து = 1. மெல்லியது. 2. கனமில்லாதது. “விண்ணி னொய்தால்” (ஞானவர. வீதக. 76). “நொய்தாந் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்” (நீதி வெண்பா. 8). 3. இழிவானது. “நொய்தி னொய்ய சொல்” (கம்பரா. பாயி. 5). 4. விரைவு. ‘ஆயிழை நொய்தினுரை” (சீவக. 1767).

நொய்- நொசு. நொசு- நொச. நொசநொசத்தல் = சோறுங் கஞ்சியும் கட்டுவிட்டு நொந்து போதல்.

நொசநொச வெனல் = சோறு நொந்துபோன நிலையடைதல். நொய் - நொ . நொதல் = சோறு நொந்துபோதல்.

நொசு- நசு. நசுநசுத்தல் = 1. குழைதல். 2. தடுமாறுதல். 3. விடாது தூறுதல். நசுநசுத்த மழை (உ.வ.) 4. ஈரமாயிருத்தல்.

நசுநசெனல் = 1. கட்டு நெகிழ்தற் குறிப்பு. 2. மெதுவாயிருத்தற் குறிப்பு. 3. விடாது மழை தூறற்குறிப்பு. 4. ஈரமாயிருத்தற் குறிப்பு.

நொசு- நொசி. நொசிதல் = 1. நைதல். "நொசிந்ததுகில்” (தொல். சொல். 330, உரை). 2. குறைவுறுதல் “நொசிவிலாத பூசனை” (விநாயகபு. 36:37).

நசு-நச்சு. நச்சுமழை = விடாத சிறு தூறல். நச்சு வாயன் = விடாது பேசும் அலப்புவாயன்.

நொய் -ஒ. நோ : பொய் (உட்டுளை) - பை. நைதல் = 1. நசுங்குதல். 2. தளர்தல். "இடைநை வதுகண்டு" (திருக்கோ. 134). 3. வாடுதல். 4. மனம் வருந்துதல். “நைந்து சாமவர்க்கே” (திருநூற். 43). 5. இரங்குதல். "நீநல் காமையின் நைவரச் சாஅய்” (புறம். 146). 6. தன்வயமிழத்தல். “அரிவை நய” (சீவக. 492). 7. சுருங்குதல். “நையாத வாயுளுஞ் செல்வமும்” (அருட்பா. 5, பொது. 2). 8. மாத்திரை குறைதல். “வன்மையேலுகர முறுவது நையும்” (வீரசோ. சந்தி. 2), 9. நிலைகெடுதல். 10.கெடுதல்.