உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

=

வேர்ச்சொற் கட்டுரைகள்

நசுக்கான் = 1. சிறியது. 2. சிறுபையன். நசுக்கான் பையன். (உ.வ.).

=

நசுவல் = 1. ஊக்கமற்ற- வன்- வள்- து. 2. மெலிந்த- வன்- வள்

-

து.

நை - நைஞ்சு- நஞ்சு. ஒ. நோ: பை- பைஞ்சு- பஞ்சு. மை-

=

மைஞ்சு - மஞ்சு. பைம்மை = மென்மை. பைஞ்சு = மெல்லியது, நொய்யது. நஞ்சு = 1. உட்கொண்ட வுயிரிகளை நைவிக்கும் அல்லது கொல்லும் பொருள். “பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்” (குறள். 580). 2. தீயது. “அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”, அவன் வாயிலிருந்து வருவதெல்லாம் நஞ்சு (உ.வ.). 3. நஞ்சுக்கொடி. குழந்தை பிறந்துவிட்டது; ஆனால், நஞ்சு இன்னும் விழவில்லை. (உ.வ.).

நஞ்சு- நஞ்சன் = தீயவன்.

நைந்தான் = மெலிந்தான். நைந்தான் - நஞ்சான். நஞ்சானுங் குஞ்சும் = மெலிந்த குழந்தை குட்டிகள். நைந்து = மனமிரங்கி. நைந்து- நஞ்சு.

ஒ.நோ: ஐந்து - அஞ்சு.

நஞ்சுறுதல்

=

மனமுருகுதல், உளங்கனிதல். 'நஞ்சுற்ற காம

நனிநாகரிற் றுய்த்த வாறும்” (சீவக. 11).

நோதற் கருத்துச் சொற்கள்

நெகிழ்ச்சிக் கருத்தில் தளர்ச்சிக் கருத்தும், தளர்ச்சிக் கருத்திற் கட்டுக்குலைவுக் கருத்தும், கட்டுக்குலைவுக் கருத்தில் வலுக் குறைவுக் கருத்தும், வலுக்குறைவுக் கருத்தில் வருந்தற் கருத்தும் பிறக்கும்.

வருந்தற் கருத்தில், நோயுறுதற் கருத்தும் துன்புறுதற் கருத்தும் தோன்றும்.

இவ் வெல்லாக் கருத்துகளினின்றும் அழிவுக் கருத்துக் கிளைக்கும். நுல் - நல் - நலி.

நலிதல் = 1. வருந்துதல், "தேடி நலிந்தே கண்ணாற் காணாத காரணனை” (சிவரக. நந்திகண. 1). 2. வருத்துதல். "நடுங்கஞர் நலிய” (பு.வெ. 12, பெண்பாற். 15, கொளு). தெ. நலி.