உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல்" (நெகிழ்ச்சிக் கருத்துவேர்)

நலித்தல் = வருத்துதல்.

33

நலிவு = 1. துன்பம். "வையகத்து நலிவுகண்டு” (பு.வெ. 8 : 34, கொளு). 2. கேடு. "நோற்று நலிவிலா வுலக மெய்தல்” (சீவக. 2727).

நுல் - நுள் - நொள்.

நொள்- நொள்ளா- நொள்ளாப்பு = வருத்தம்.

நொள்- நொய்- (நய்)- நை.

நைதல் = மனம் வருந்துதல்.

நைகரம் = துன்பம். “நைகர மொழிந்து” (விநாயகபு. 57: 18)

நை = துன்பம். நைவருதல் = வருந்துதல். "நைவாரா வாயமக டோள்” (கலித். 103 : 66). நைவு = 1. வருந்துகை. 2. நோய். 'நாளு நைவகன்ற” (தைலவ. தைல. பாயி. 1).

நைநை யெனல் = குழந்தை விடாது அழுது தொந்தரவு செய்தல்.

நை - (நய்) - நசு- நசல் = நோய் (W.)

நசலாளி = நோயாளி(W.).

நசிறாண்டி- தொந்தரவு செய்வோன் (யாழ்ப்).

நசிறாளி - நசிறாணி = தொந்தரவு செய்பவன் (யாழ்ப்).

=

ஒ.நோ: களவாளி- களவாணி.

நசு - நசுவல் = தொந்தரவு செய்பவன்- வள்- து.

நசுநசுத்தல் = தொந்தரவு செய்தல்.

நசுநசெனல் = தொந்தரவு செய்தற் குறிப்பு.

நசு- நச்சு = 1. தொந்தரவு. நச்சுப் பிடித்தவன் (உ.வ.). 2. அலப்பல்.

நச்சுதல் = 1. தொந்தரவு செய்தல். 2. அலப்புதல்.

நச்சுவேலை (நச்சுப் பிடித்த வேலை) = தொந்தரவு உண்டாக்கும் வேலை.

நச்சு - நச்சி = வீண் பேச்சுப் பேசித் தொந்தரவு செய்பவன்.

நச்சுநச்செனல் = தொந்தரவு செய்தற் குறிப்பு.

நச்சுப் பிச்சு = 1. தொந்தரவு. 2. ஓயாது அலப்புகை.