உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

வேர்ச்சொற் கட்டுரைகள்

நொய்- (நொயி) - நொசி. நொசிதல் = வருந்துதல்.

நொசித்தல் = வருந்துதல். “நொசித்த வெம்முலை” (சீவக. 654).

நொசி- நொசிவு = வருத்தம் (சூடா.).

நொள்- நெள் (நெழு)- நெகு.

6

நெகுதல் = 1. வருந்துதல். “இனிச்செயல் யாவதென வுள நெக்கார்” (காஞ்சிப்பு. கயிலா. 30). 2. கெடுதல். “மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது” (சீவக. 426).

நொள்- நொது- நொந்து- நந்து- நந்தம் - நத்தம் = அழிந்துபோன வூரிடம், பாலைநிலத்தூர்.

பகைவரால் அழிக்கப்பட்டுப் பாழடைந்த ஊரிருந்த இடங்கள், இன்றும் நத்தப்பாழ் என்றும் நத்தத்து மேடு என்றும் சொல்லப்படும்.

நொள் - நோள் - நோளை = நோய்நிலை, நோளையுடம்பு (நோளைச் சரீரம்) (W.).

=

நோள்- நோய் = 1. நோவு. 2. பிணி. “நோயிகந்து நோக்கு விளங்க” (மதுரைக். 13). 3. துன்பம். “அதிர வருவதோர் நோய்” (குறள். 429). 4. துயரம் (பிங்.). 5. அச்சம். “நோயுடை நுடங்குசூர்” (பரிபா. 5 : 4). 6. குற்றம். “பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய்” (குறள். 851).

ம. நோயி.

நோயாளி = பிணியாளி.

நோய்தல் = 1. நோயால் மெலிதல். 2. பயிர் நோயால் வாடுதல்.

நோய்த்தல் = 1. நோயால் வருந்துதல். 2. நோயால் மெலிதல். 3. பயிர் நோயால் வாடுதல். 4. நிலம் உரமற்றுப் போதல்.

நோய்த்தல்- நோய்ச்சல் = நோய்ப்படுகை.

நோய்த்தல் - நோய்ஞ்சல்- நோயால் மெலிதல். நோய்ஞ்சல் - நோஞ்சல் = மெலிவு.

நோய்ஞ்சல்- நோய்ஞ்சலன் = நோயாளி.

நோய்ந்தான் மெலிந்தவன்.

-

நோய்ஞ்சான்

நோஞ்சான்

=

நோயால்

நோய்ஞ்சி = நோயாளி. நோய்ஞ்சி - நோய்ஞ்சியன் = நோயாளி.

நோய்ஞ்சி- நோஞ்சி.