உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல்" (நெகிழ்ச்சிக் கருத்துவேர்)

நோய்முகன் = துன்பஞ் செய்யும் காரி (சனி). (தைலவ. தைல.).

35

நோய்- நோ. நோதல் = 1. நோவுண்டாதல், கண் நோகிறது (உ.வ.). 2. வருந்துதல். 'ஊரன்மீ தீப்பறக்க நொந்தேனும் யானே” (நாலடி.389). 3. துன்பப்படுதல். 4. வறுமைப்படுதல். நொந்தகுடி (உ.வ.). 5. துன்பத்தைச் சொல்லுதல். “நோவற்க நொந்த தறியார்க்கு” (குறள். 877). 6. சமைத்த வுண்டி பதன் கெடுதல். சோறு நொந்துபோய் விட்டது (உ.வ.). க.நோ. ம. நோ (க.), தெ. நோகுலு (g). நோ- நோதலை = நோதல்.

நோதல்- நோசல் = நோவு (W.).

நோ-நோதிறம் = முல்லை பாலைத் திணைகட்குரிய துயரப் பண்வகை (பிங்.). “பாண்வாய் வண்டு நோதிறம் பாட” (சிலப். 4 : 75). நோ = 1. வலி. 2. நோய் (W.). 3. துன்பம். “நோநொந்து” (குறள். 157). 4. வலுக்குறைவு. 5. சிதைவு.

நோ- நோக்காடு = 1. நோவு. 2. நோய். கொள்ளையா நோக்காடா? (உ.வ.). 'கண்ணோக் காடாம்” (பணவிடு. 300). 3. மன நோவு (W.). 4. வறுமை (யாழ்ப் ).

நோ- நோப்பு- நோப்பாளம் = 1. வருத்தம். 2. சினம்.

“உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளம்” (பழ.)

நோ- நோவு = 1. வலி. 2. ஈன்வலி. “ஈன்றக்கா னோவும்” (நாலடி. 201). 3. நோய். 4. துன்பம் (திவா.). 5. இரக்கம். “தாம் நோவுபடா நிற்பர்” (ஈடு).

வறுமையும் நோய்போன்ற துன்பமாகக் கருதப்படுவதால், நோய்நொடி யென்றும் நோவுநொடி யென்றும் இணைத்துச் சொல்வது மரபு. நொடித்தல் = நிலைகெடுதல், வறுமைப்படுதல்.

நோவாளி = நோயாளி.

ம., க., து. நோவு.

=

நோ- நொ. நொதல் = துன்புறுதல். “நொக்கொற்றா” (தொல். எழுத்து. 72, உரை). “நொப்போ வௌவுரிஞ்” (நன். 137).

6

நொ = 1. துன்பம். “நொவ்வுற லெய்தி” (கந்தபு. திருவவ. 39). 2. நோய்(W.)

நொ- நொம்பு - நொம்பலம் = துன்பம். ம. நொம்பலம்.

நொ- நொவ்வு. நொவ்வுதல் = 1. நோதல். 2. துன்புறுதல்.