உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

நொவ்வு = மெலிவு.

வேர்ச்சொற் கட்டுரைகள்

நொவ்வல் = 1. நோவு. 2. துன்பம். “மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக” (அகம். 98).

குறிப்பு : காரிக்கோள் துன்பந் தருவது என்னும் கருத்தினால், அது நோய்முகன் என்னப்பட்டது. ஆயின், இடைக்காலத்தில் தமிழ்ப்பகைவர் காரி என்னும் தென்சொல்லை வழக்கு வீழ்த்திச் 'சனி' என்னும் வடசொல்லைப் புகுத்தினதினால், 'சனியன்' என்னும் சொல் வழங்கத் தலைப்பட்டது. தமிழர் அனைவரும், இனி நோய்முகன் என்னும் சொல்லையே 'சனியன்' என்பதற்குத் தலைமாறாக வழங்குக.

னி