உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5

LO

நுல்' (நீட்சிக் கருத்துவேர்)

நீட்சிக் கருத்து நெகிழ்ச்சிக் கருத்தின் வழிநிலைக் கருத்தே. நிற்றற் கருத்தும் நடத்தற் கருத்தும் நீட்சிக் கருத்தினின்று தோன்றும்.

நுல்- நெல்- நெள்- நெகு- நெகிழ் (நெகிள்)- நீள்.

நெகிள் (நெகிழ்) -நிகள் - நீள் -நிகளம்.நிகள் - நிகலம் = நீளம் (2.01.).

எதுகை முகனை என்பதை எகனைமுகனை யென்பதுபோல், அகலம் நீளம் என்பதை அகலம் நிகளம் என்றும் பொதுமக்கள் வழங்கியிருக்கலாம்.

ஈயமும் மெழுகும் போல்வன உருகியும், களியும் களிமண் ணும் போல்வன நீர்கலந்தும், நெகிழும்போது நீளுதல் காண்க.

1.நீடல்

நீளுதல்

=

1.நீளமாதல்.2. பெருமையுறுதல் "நீள்கழற் கன்பு

செய்வாம்” (கந்தபு. கடவுள் வா. 2). 3. ஓடுதல் (திவா.).

ம.நீளுக, க.நீள்.

ஓடுதலாவது இயக்கத்தால் (செலவால்) விரைந்து நீளுதல். ஒ.நோ: படர்தல் = பரவுதல், செல்லுதல். "கம்பியை நீட்டிவிட்டான்” என்னும் உலக வழக்கையும் நோக்குக.

நீள் = 1. நீளம். 2. நெடுங்காலம் (காலநீட்சி). “நீடூங்காய்” (கலித். 131). 3. உயரம் (மேனோக்கிய நீட்சி). 4. ஆழம் (கீழ்நோக்கிய நீட்சி). ‘“நீணிலைக் கூவல்” (கல்லா. 12). 5. ஒழுங்கு (நேர்வரிசை நீட்சி).

=

நீளம் 1. நெடுந்தொலைவாக. 2. நெடுங்காலமாக. 'நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுதேன்” (தேவா. 825: 1).

நீள் - நீளக்க (உ.வ.). 1. நெடிதாக. 2. நெடுந்தொலைவாக. 3. நெடுங்காலமாக.