உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

வேர்ச்சொற் கட்டுரைகள்

=

நீள் - நீளம் = 1. நெடுமை. "நீளம் பெருங்கண்களே” (திருக்கோ. 109). 2. தொலைவு (பிங்.). “கையா னிளமாப் புடைப்ப” (சீவக. 2248). 3. காலத்தாழ்ப்பு.

நீளங்கடை = நாட்செல்லுகை (யாழ். அக.). ம. நீளம், க. நீள.

=

நீள் - நீளி. நீளித்தல் = 1. நீளுதல். 2. நெடுங்கால மிருத்தல். 3. காலந்தாழ்த்தல்.

நீளி = 1. நெடியவன். 2. நெடியது. நீள் - நீளை = காற்று (நீண்டு இயங்குவது) (பிங்.).

நீள் - நீளல் - நீழல் = காற்று (திவா.).

நீள் - நீட்சி - நீட்சிமை = நீட்டம்.

நீள்- நீட்பு - நீட்பம் = நீளம்.

நீள் - நீண்டவன் = திருமால் (குறள் தோற்றரவில் வானளாவ வுயர்ந்தவன்). “நீண்டவன் றுயின்ற சூழ லிதுவெனின்” (கம்பரா. குகப். 41). நீண்டாயம் = நீளம் (யாழ். அக.).

நீள்- நீண்மை = பழைமை. "நீண்மைக்க ணின்றுவந்த நிதியெலாந் தருவல்” (சீவக. 1119).

நீள் - நீண். நீணுதல் = நெடுந்தொலை செல்லுதல். "தண்டா மரையானு நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்” (தேவா. 62:9).

6

நீள்- நீட்டு (பி.வி.). நீட்டுதல் = 1. நீளச்செய்தல். நாக்கை நீட்டு (உ.வ.). 2. பக்கவாட்டில் நீளக்காட்டுதல். கையை நீட்டு (உ.வ.). 3. கை நீட்டிக் கொடுத்தல். 4. பரிசிலளித்தல். "பாடிய புலவர்க்குப் பரிசி னீட்டின்று” (பு.வெ. 3:16, கொளு). 5. காணிக்கை படைத்தல். “தளிகை நீட்டினதெல்லாம் " (திருவிருத். 33, ப. 204). 6. நீண்ட பொருளைச் செருகுதல். 'குருதிவாள்... புண்ணு ணீட்டி” (சீவக. 2293). 7. நீளப் பேசுதல். 8. நீள இசைத்தல். 9. காலந்தாழ்த்தல்.

நீட்டு- நீட்டல் = 1. நீளச்செய்தல். 2. குறிலை நெடிலாக இசைத்தல். நீட்டும்வழி நீட்டலும்” (தொல். எச்ச. 7). 3. நீட்டி யளத்தல். “முகத்த னீட்டல்” (நன். 368). 4. தலைமயிரைச் சடையாக வளர்த்தல். “மழித்தலு நீட்டலும் வேண்டா” (குறள். 280). 5. பெருங்கொடை (பிங்.).

=

நீட்டு - நீட்டம் = 1. நீட்டுகை. "வெள்ளத் தனைய மலர் நீட்டம்” (குறள். 595). 2. ஓசை நீட்சி. “நீட்டம் வேண்டின்... கூட்டி யெழூஉதல்” (தொல். எழுத்து. 6). 3. காலந்தாழ்ப்பு. "நிலைமை யறிய நீட்ட மின்றி” (பெருங். மகத. 23:51).