உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல்' (நீட்சிக் கருத்துவேர்)

39

நீட்டு = 1. நீளவாட்டு. ஆவணம் நீட்டில் மடித்திருந்தது (உ.வ.). 2. நீட்டோலை. "நீட்டோலை வாசியா நின்றான்” (மூதுரை, 13). 3. தொலைவு. “மதுரை நீட்டைந்து கூப்பிடு" (திருவாலவா. 2688). நெடுநீட்டு = பெருந்தொலைவு.

=

நீட்டு - நீட்டி. நீட்டித்தல் = 1. நீளச் செய்தல். கம்பியை நீட்டிக்க வேண்டும் (உ.வ.). 2. நீட்டிப் பேசுதல், பேச்சை நீட்டிக்கிறான் (உ.வ.). 3. காலந்தாழ்த்தல். "தீம்பால் பெருகு மளவெல்லா நீட்டித்த காரணமென” (கலித். 83). 4. நெடுங்காலம் நிலைத்தல். இவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின்” (நாலடி. 40).

நீள் - நீடு. நீடுதல் = 1. நீளுதல். 2. ஒலி நீளுதல். “ஒற்றிசை நீடலும்” (தொல். எழுத்து. 33). 3. பெருகுதல். நீடிய செல்வம் (W.) 4. மேம்படுதல். நிலைமை நீடுத றலைமையோ நன்றே” (ஞானா. பாயி. 3). 5. காலந்தாழ்த்தல். “நீடன்மின் வாரு மென்பவர் சொற்போன்றனவே” (பரிபா. 14:9).6. நீண்ட நேரம் அல்லது காலம் தங்குதல். “அளிநீடளகம்’” (திருக்கோ. 122). 7. நிலைத்தல்.

ம.நீடுக.க.நீடு, தெ. நெகெடு (g).

நீடு = 1. நெடுங்காலம். “நீடுவாழ் கென்பாக் கறிந்து” (குறள். 1312). 2. நிலைத்திருக்கை, 'நிலமிசை நீடுவாழ் வார்” (குறள். 3).

நீடு- நீடி. நீடித்தல் = 1. நீளுதல். வாழ்நாள் நீடிக்கும் (உ.வ.). 2. நிலைநிற்றல்.

நெள் - நெடு = 1. நீண்ட. "வேனெடுங் கண்கள்” (சீவக. 1951). 2. பெரிய “புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை” (பு. வெ. 9:2, கொளு). 3. பெருமை பெற்ற. “நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்” (மணிமே. 10:93). 4. ஆழமான. “நெடும்புனலுள் வெல்லும் முதலை” (குறள். 495). 5. உயரமான. “நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே” (கம்பர் தனிப்பாடல்). 6. மிகுந்த. "நெடுமிடல் சாய” (பதிற். 32 : 10). 7. நீண்டகால நெடும்பகை (உ.வ.). 8. காலந்தாழ்க்கும். "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்” (குறள். 605). 9. புகழ்ச்சியான. “மாராயம் பெற்ற நெடுமொழி யானும்” (தொல். புறத். 8).

நெடுமை = 1. நீளம். “குறுமையு நெடுமையு மளவிற் கோடலின்” (தொல். மொழி. 17). 2. உயரம். "நெடுமையாலுலகேழு மளந்தாய்” (திவ். பெரியாழ். 5: 1: 4).

நெடு - நெடுமன் = 1. நீண்டது. 2. பாம்பு (யாழ். அக.).

நெடு நெடுவல்

=

நெடிய ஆள் (யாழ். அக.). நெடுமி = 1. நெடியவள் (யாழ்ப்.). 2. ஓங்கி யுயர்ந்த மரம் (யாழ்ப்.).