பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

105



கொடுங்கோலனாயின், ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - உறுதியாக விரைந்து கெடுவான். ஒருவந்தம் - ஒருதலை

564: இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த னுறைகடுகி யொல்லைக் கெடும்.

(இ-ரை.) இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் - நம் அரசன் கொடியவன் என்று குடிகளாற் சொல்லப்படும் துன்பந்தருஞ் சொல்லைத் தோற்றுவிக்கும் அரசன்; உறை கடுகி ஒல்லைக் கெடும் - வாழ்நாள் குறைந்து தன் செல்வத்தையும் விரைந்திழப்பான்.

இன்னாச்சொல் உளம் நொந்து உரைக்கும் சொல். 'உறை' முதனிலைத் தொழிலாகு பெயர். உறைதல் - தங்குதல் அல்லது குடியிருத்தல்.

565. அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து.

(இ-ரை.) அருஞ் செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - காண விரும்பிய குடிகட்கு எளிதாய்க் காணப்படாதவனாகவும் அரிதிற் கண்டவர்க்கும் சுடுமுகத்தனாகவு மிருக்கும் அரசனின் பெருஞ்செல்வம்; பேய் கண்ட அன்னது உடைத்து - பூதங் காத்தற் போன்ற தன்மையை உடையது.

அரசன் செல்வம் குடிகட்குப் பயன்படாமையாலும் அண்டுதற்கிட மின்மையாலும் பேய்காத்தாற் போன்றதென்றார். செவ்வி பார்க்கத்தக்க செவ்வையான நிலை. அருமை - எளிதாய்க் கிட்டாமை. 'பேஎய்' இசைநிறை யளபெடை. செவ்வியருமையை அருஞ்செவ்வி யென்றது செய்யுள் நடை.

566. கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ நீடின்றி யாங்கே கெடும்.

(இ-ரை.) கடுஞ்சொல்லன் கண் இலன் ஆயின் - அரசன் கடுஞ்சொற் சொல்பவனுங் கண்ணோட்ட மில்லாதவனுமாயின்; நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெருஞ் செல்வம் நீடித்தலின்றி அப்பொழுதே கெடும்.

கடுஞ்சொல்லும் கண்ணோட்டமின்மையும் குடிகட்கு அச்சத்தை விளைத்தலின், வெருவந்த செயல்களாயின. 'கண்' ஆகுபெயர். விரைந் தழியத்தகாத பெருஞ் செல்வமாயினும் என்பார் 'நெடுஞ்செல்வம்' என்றார்.