பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

104

திருக்குறள்

தமிழ் மரபுரை



செய்தல் கொடுங்கோன்மையின் பாற்படுதலின். இது அதன்பின் வைக்கப்பட்டது.

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா லொத்தாங் கொறுப்பது வேந்து.

(இ-ரை.) தக்காங்கு நாடி - ஒருவன் பிறனுக்கு அல்லது பிறருக்குச் செய்த தீங்கைத் தகுந்த முறையில் நாடு நின்றாராய்ந்து; தலைச்செல்லா வண்ணத்தால் - அவன் மேலும் அதைச் செய்யாதிருத்தற் பொருட்டு;ஒத்தாங்கு ஒறுப்பது - அவன் குற்றத்திற்கேற்ப அவனைத் தண்டிப்பவனே; வேந்து - நல்லரசனாவன்.

தக்காங்கு நாடுதலாவது, குற்றஞ்சாட்டியும் குற்றஞ்சாடியும் ஆகிய இருவர் சொல்லையும் எழுதரங் கேட்டு, சான்றியங்களையும் சான்றுகளையும் காய்த லுவத்தலின்றி நடுநிலையாய் ஆராய்ந்து குற்றவாளி யாரென்று காணுதல். ஒத்தாங் கொறுத்தலாவது கண்ணோட்டமுங் கண்ணறவுமின்றிக் குற்றத்திற்குத் தக்க தண்டனை செய்தல். தக்காங்கு நாடாமையுங் கடுந்தண்டமும் வெருவந்த செய்தலாம். தக்க ஆங்கு தக்காங்கு (தக்கவாறு). ஒத்த ஆங்கு ஒத்தாங்கு (ஒத்தவாறு).

562. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க நீங்காமை வேண்டு பவர்.

(இ-ரை.) ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் - ஆட்சிச் செல்வம் தங்களிடம் நெடுங்காலம் நிற்றலை விரும்பும் அரசர்; கடிது ஓச்சி - குற்றவாளியைத் தண்டிக்கும்போது தண்டனையைக் கடுமையாகக் காட்டி; மெல்ல எறிக - மென்மையாகச் செய்க.

கல்லை அல்லது வேலை எறிபவன் கையை மிகவுயர்த்திப் பின்பு தாழ்த்தி மெல்ல எறிவதுபோல, தண்டனையை அளவிறந்து செய்வதுபோற் காட்டுவது குற்றவாளி அஞ்சுதற் பொருட்டும், அளவாகச் செய்வது குடிகள் அஞ்சாமைப் பொருட்டும். வேண்டுமென்பதாம்.

563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி னொருவந்த மொல்லைக் கெடும்.

(இ-ரை.) வெருவந்த செய்து ஒழுகும் வெம்கோலன் ஆயின் - அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து வாழுங்