பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

103



பிராமணர். வேதமோதுதலையும் வேள்வி வளர்த்தலையும் பருவ மழைக்குக் கரணியமாகக் கூறினாரென்பது பச்சைப் பொய்யாம்.

"இயல்புளி ......தொக்கு " (545)

என்றும்.

"முறைகோடி.........பெயல்" (556)

என்றும், செங்கோலாட்சியே பருவமழைக்குக் கரணியமென்று ஆசிரியர் தெளிவாகக் கூறியிருக்கவும், அதை மறுத்து ஆரிய தேவவேள்வியே அதற்குக் கரணியமென்று பரிமேலழகர் உரைக்க இடந்தந்தது தமிழர் அடிமைத்தனமேயன்றி வேறன்று. பிராமணரை அறுதொழிலோர் என்பது ஆரிய ஏற்பாடேயன்றித் தமிழர் கொள்கையன்று. பரிமேலழகர் கருத்தே வள்ளுவரதாயின்,

இயல்புளி வேள்வி யியற்றுவா னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு

என்றோ.

மறைகோடி வேள்வி மறப்பி னுறைகோடி யொல்லாது வானம் பெயல்

என்றோ பாடியிருப்பர்.

கொடுங்கோலால் மழைபெய்யாமையும், மழை பெய்யாமையால் ஆபயன் குன்றலும், ஆபயன் குன்றலால் அறுதொழில் நடவாமையும் ஆக ஆசிரியராற் கூறப்பட்ட நிகழ்ச்சித் தொடரை, பரிமேலழகர் தலைகீழாக மாற்றி ஆபயன் குன்றலால் வேள்வி நடவாமையும் வேள்வி நடவாமையால் மழைபெய்யாமையும் என வலிந்து கூறியிருத்தல் காண்க.

பேரா.கா.சுப்பிரமணியப் பிள்ளையார் 'அறிதொழிலோர்' என்று பாடங்கொண்டு, "காவலன் காவான் எனின் - அரசன் (உயிர்களைக்) காப்பாற்றானாயின்; ஆபயன் குன்றும் - முயற்சி செய்வார்க்கு அம் முயற்சி யாலுண்டாகும் இயல்பான பயன் இல்லாமற் போகும்; அறிதொழிலோர் நூல் மறப்பர் - அறியுந் தொழிலையுடைய கலைஞர் தாங் கற்றற்குரிய நூல்களைக் கற்பதைக் கைவிடுவர்" என்று பொருள் கூறுவர்.

அதி. 57 - வெருவந்த செய்யாமை அதாவது, குடிகளும் வினைச் சுற்றமும் தானும் அஞ்சத்தக்க செயல்களைச் செய்யாமை; வெரு - அச்சம். வெருவருதல் - அஞ்சுதல். வெருவந்த