பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

102

திருக்குறள்

தமிழ் மரபுரை



நூற்றுறையாகவு மிருத்தலால், இருவகைக்” கல்வியையும் அறுவகைத் தொழிலாக வகுத்தனர் முன்னோர்.

“உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில்கற்ப நடையது கரும பூமி"

என்பது திவாகரம். உழவு என்பது நெசவொழிந்த பதினெண் கைத்தொழிலையும் தன்னுள் அடக்கும். தொழில் என்று விதந்தது நெசவை. அது பிற்காலத்தில் உழவிற்குத் துணையான பதினெண் பக்கத் தொழில்களுள் ஒன்றாயிற்று.

“செய்யுந் தொழிலெல்லாஞ் சீர்தூக்கிப் பார்க்குங்கால் நெய்யுந் தொழிற்கு நிகரில்லை - மெய்யதுபோல் வள்ளுவன் வண்டமிழின் மானங்காத் துப்பெருமை கொள்ளவே செய்தான் குறள்.'

வரைவு ஓவியம். விச்சை கல்வி, விழி - (விடி) L. vide-வித் (வ.) - வித்யா - வித்தை - விச்சை. சிற்பம் என்றது ஐவகைக் கொல்லத் தொழிலை. குயத் தொழில் ஐவகைக் கொல்லுள் ஒன்றாகிய கன்னத்தொழிலுள் அடங்கும். கரும ‘பூமி' என்றது பண்டை ஞாலத்துட் சிறந்த நாவலந்தீவை. தொழிற்குரிய மண்ணுலகத்தைக் கருமநிலம் என்றும், தொய்யா வுலகமாகிய விண்ணுலகத்தை இன்பநிலம் என்றும் கொண்டனர். அறுவகைத் தொழிற்கும் பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டில் நூல்களிருந்தன.

‘ஆபயன் குன்றும்' என்பது, மழையின்மையால் நிலத்தில் விளையும் உணவு மட்டுமன்றி ஆவிற் சுரக்கும் பாலுமிரா தென்பதாம். அதனால் அறுதொழிலும் நடைபெறா என்றவாறு. முற்றும்மை தொக்கது.

பரிமேலழகர் அறுதொழிலோரைப் பிராமணராகக் கொண்டு, அவ்வழுவை இருமடியாக்க அவரை அந்தணர் என்னுஞ் சொல்லாற் குறித்து, "அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல். ஏற்றலென விவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்ப மென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயலொல்லா தென்பதாயிற்று" என்று தம் ஆரியநஞ்சை வெளிப்படுத்தியுள்ளார். திருவள்ளுவர் தமிழறத்தையே இங்கு எடுத்துக் கூறுதலானும் ஆரிய முறையைக் கண்டித்தலானும்,