பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

101



விளைகிறது” என்னும் வழக்கைத் தழுவியது. உறைத்துப் பெய்யும் மழை உறை.

"இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு" (குறள். 545)

என்றதனால்,

இயல்புளிக் கோலோச்சா மன்னவ னாட்டிற் பெயலும் விளையுளு மில்

என்பது தானே வெளியாம்.

“கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை” (மணிமே.7:8-10)

560. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்.

(இ-ரை.) காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் குடிகளையும் அவர்கட்குப் பயன்படும் உயிரிகளையும் காவானாயின்; ஆபயன் குன்றும் - அவன் நாட்டு ஆக்களும் பால் குன்றும்; அறுதொழிலோர் நூன்மறப்பர் - அறுவகைத் தொழில் செய்வோரும் தத்தமக்குரிய நூல் கற்பதை அல்லது பார்ப்பதை விட்டுவிடுவர்.

முந்தின குறளில் கொடுங்கோலரசன் நாட்டில் மழைபெய்யாமை கூறப்பட்டது.

"விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது." (குறள்.16)

ஆதலால் மேய்ச்சற் புல்லின்றி ஆக்களும் பால்தரா. அதனால் தொடக்கந் தொட்டுப் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்னும் ஐவகையில் மாந்தரெல்லார்க்கும் பயன்பட்டுவரும் இன்றியமையாத இயற்கையுணவு இல்லாமற்போம். குடிப்பாகவும் உணவாகவும் பயன்படும் பாலும், உடற் சூட்டைத் தணிக்கும் மோரும், மூளைவளர்ச்சிக் கேற்ற நெய்யும் கல்வி கற்போருக்கு மிகத் தேவையானவை. கல்வி, நூற்கல்வியும் தொழிற்கல்வியும் என இருதிறப்படும். நூற்கல்வியும் பல தொழிலாகவும் தொழிற்கல்வியும் பல