பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

100

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) துளியின்மை ஞாலத்திற்கு எற்று - மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அத்தகையதே அரசனின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்குந் துன்பமும் ஆகும்.

"வானோக்கி வாழு முலகெல்லாம்" (குறள். 542)

என்னுங் குறள் இங்கு எதிர்மறைமுகத்தால் ஒரு புது வலிமை பெறக் கூறப்பட்டது. இலை யென்பது சிறப்பாக வாழையிலையைக் குறித்தல்போல், துளியென்பது இங்கு மழைத்துளியைக் குறித்து மழையென்னும் பொருளில் ஆகுபெயராக நின்றது. உயிர் என்றது இங்குக் குடிகளை.

‘ஞாலம்’ ஆகுபெயர். என்னது - எற்று. (என்+து). அன்னது – அற்று, (அன் + து). ஏகாரம் தேற்றம்.

558. இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.

(இ-ரை.) முறை செய்யா மன்னவன் கோல் கீழ்ப்படின் - முறை (நீதி) செய்யாத அரசனின் கொடுங்கோலாட்சியின்கீழ் வாழின்; உடைமை இன்மையின் இன்னாது - இன்பந்தர வேண்டிய செல்வநிலை துன்பந்தரும் இயல்புள்ள வறுமையினும் துன்பமானதாம்.

உடல் வருந்தப் பாடுபட்டுத் தேடிய செல்வத்தைக் கொடுங்கோலரசன் எளிதாய்க் கேட்டமட்டிற் கொடாவிடின், சிறைகாவற்கும் நையப்புடைப்பிற்கும் மட்டுமன்றிக் கொலைத் தண்டத்திற்கும் ஆளாக நேருமாதலின், இன்னாமையிற் தன்னேரில்லா இன்மையும் கொடுங்கோல் நாட்டில் உடைமையின் இனிய தென்றார்.

559. முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயல்.

(இ-ரை.) மன்னவன் முறைகோடிச் செய்யின் - அரசன் முறை தவறி ஆட்சி செய்வானாயின்; உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டிற் பருவமழை தவறுவதால் வானம் பொழிதலைச் செய்யாது.

உறைகோடுதலாவது மழை இயற்கையாகப் பெய்யவேண்டிய காலத்துப் பெய்யாமை. 'வானம் பெயல்' என்பது "வானம் பெய்கிறது. வையம் (பூமி)