பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

27



கேள்வியறிவு பண்பட்ட மக்கட்குச் சுவைமிக்கதாயும் மறுமைக்கும் பயன்படுவதாயும் அருகியே வாய்ப்பதாயு மிருத்தலால், 'இல்லாத போழ்து' என்றும், பேருணவாயின் சோம்பலும் தேடற்றுன்பமும் நோயுங் காமமும் மிகுதலால் 'சிறிது' என்றும், அதுவும்,

“உண்டி முதற்றே உணவின் பிண்டம்” (புறம்.18)

“உடம்பா ரழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்" (திருமந்.724)

ஆதலால் பின்னும் உடம்போடிருந்து கேட்டற்பொருட்டு 'ஈயப்படும்' என்று சிறிது இழிவு தோன்றவும் கூறினார். உம்மை இழிவு கலந்த இறந்தது தழுவிய எச்சவும்மை.

413. செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி னான்றாரோ டொப்பர் நிலத்து.

(இ-ரை.) செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வி யறிவினை யுடையார்; நிலத்து அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர் - நிலவுலகில் வாழ்வாராயினும் அவியுணவினையுடைய விண்ணுலகத் தேவரை யொப்பர்.

செவியுணவின் கேள்வி என்பதிலுள்ள இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. தேவர் அறிவுடையார் என்னுங் கருத்தால் ஆன்றோர் என்னப் பெற்றார். கேள்வியறிவினை யுடையார் துன்பமின்றி யின்பமே நுகர்தலால் தேவருக்கொப்பாகக் கூறப்பட்டார்.

414. கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை.

(இ-ரை.) கற்றிலன் ஆயினும் கேட்க - ஒருவன் பொருள் நூல்களையும் உறுதிநூல்களையும் கற்றிராவிடினும், அவற்றைக் கற்றுத் தேர்ந்த பேரறிஞரிடம் கேட்டறிக; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - அக் கேள்வியறிவு ஒருவனுக்கு உலகியல் துறையிலேனும் ஆதனியல் (spiri- tual) துறையிலேனும் தளர்ச்சி நேர்ந்தவிடத்து ஊன்றுகோலாந் துணையாகும்.