பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

42

திருக்குறள்

தமிழ் மரபுரை



பரிமேழைகா்‌ “பேரறிவுடையராவாார்‌ அரசர்க்கும்‌ அங்கங்கட்கும்‌ மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமற் காத்தற்குறிய.... புரோகிதா்‌” என்று. இங்கும் தம்‌ ஆரியுநஞ்சு நிறைந்த நெஞ்சைக்‌, காட்டியுள்ளார்.

441. அறனறிந்து மூத்த வறிவுடையார்‌ கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்‌.

(இ-ரை.) அறன்‌ அறிந்து மூத்த அறிவுடையார்‌ கேண்மை - அறத்‌தின்‌ இயல்பையறிந்து தன்னினும்‌ மூத்த அறிவுடையாரது நட்பை; திறன்‌ அறிந்து தேர்ந்து கொளல்‌ - தரம்‌ அறிந்து ஆய்ந்து பார்த்துத்‌ தழுவிக்‌ கொள்க.

அறத்தின்‌ தன்மையை நூலாலன்றி உத்தியாலும்‌ பட்டறிவாலும்‌ அறிய வேண்டுதலின்‌. 'அறனறிந்து' என்றார்‌. மூத்தல்‌ ஆண்டாலும்‌ அறிவாலும்‌ முதிர்தல்‌. அறிவுடையார்‌ அரச நயன்மையையும்‌ (நீதியையும்‌) உலகியலையும்‌ ஒருங்கே அறிந்தவர்‌. திறனறிதல்‌ தலை யிடை கடை யென்னுந் தரமறிதல்.

442. உற்றநோய்‌ நீக்கி உறாஅமை முற்காக்கும்‌ பெற்றியார்ப்‌ பேணிக்‌ கொளல்‌.

(இ-ரை) உற்ற நோய்‌ நீக்கி - தெய்வத்தால்‌ அல்லது மக்களால்‌ நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி; உறாமை முன்‌ காக்கும்‌ பெற்றியார்‌ - அத்தகையன பின்பு நேராவண்ணம்‌ முன்னறிந்து காக்க வல்ல தன்மையுடையாரை; பேணிக்‌ கொளல்‌ - அவர்‌ மகிழ்வன செய்து அவர்‌ துணையைப்‌ போற்றிக்‌ கொள்க.

தெய்வத்தால்‌ வருந்துன்பங்கள்‌ மழையின்மை மிகுமழை, கடுங்காற்று, கொள்ளைநோய்‌, நிலநடுக்கம்‌, கடல்கோள்‌ முதலியன. அவை இறைவனை நோக்கிச்‌ செய்யும்‌ விழாக்களாலும்‌ வேண்டுதல்களாலும்‌ நோன்பினாலும்‌ நீக்கப்படும்‌. மக்களால்‌ வருந்துன்பங்கள்‌ பகைவர்‌ செய்யும்‌ போர்‌, கள்வர்‌ செய்யுங்‌ களவு, கொள்ளைக்காரர்‌ செய்யும்‌ கொள்ளையடிப்பும்‌ ஆறலைத்‌தலும்‌, சுற்றத்தாரும்‌ வினைசெய்வாரும்‌ செய்யும்‌ களவுங்‌ கொடுமையும்‌ முதலியன. அவை இன்சொல்‌ (சாமம்‌, பிரிவினை (பேதம்‌), கொடை தண்டம்‌ ஆகிய நால்வகை ஆம்புடையுள்‌ (உபாயத்துள்‌) ஏற்ற ஒன்றால்‌ அல்லது பலவற்றால்‌ நீக்கப்படும்‌. முற்காத்தலாவது, தெய்வத்தால்‌