பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

57



தம் நிலைமையொடு பொருந்தாத ஆம்புடைகளைச் செய்தலாவது, தாம் வலியாராயிருந்தும் மெலியார் கையாளவேண்டிய இன்சொல் கொடை பிரிப்பைக் கையாளுதலும், மெலியாராயிருந்தும் வலியார் கையாள வேண்டிய தண்டனையைக் கையாளுதலுமாம். இவ் விரண்டும் அரசியலறிவிலார் செயலாதலின், உலகு கொள்ளாதென்றார். 'தம்' என்பது ஆகுபொருளது. எள்ளாதன செய்தலாவது இயன்றவரை தமக்கு இழிவும் இழப்பும் முயற்சியு மில்லாதவற்றைச் செய்தல். முந்தின குறளிரண்டும் ஆம்புடை செயப்படுவார் திறத்தையும், இது அதனைச் செய்வார் திறத்தையும்பற்றியன. 'உலகு' வரையறுத்த இடவாகுபெயர்.

அதி. 48 - வலியறிதல் அதாவது, ஆம்புடை நான்கனுள் தண்டமாகிய போரையே துணிந்த அரசன், வினைவலி முதலிய நால்வகை வலியையும் ஒப்புநோக்கி அளந்தறிதல். அதிகார முறையும் இதனால் விளங்கும்.

471. வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல்.

(இ-ரை.) வினைவலியும் - தான் செய்யத் துணிந்த வினைவலியையும்; தன் வலியும் - அதைச் செய்தற்கிருக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும் - அதை எதிர்க்க வரும் பகைவன் வலியையும்; துணை வலியும் - இருவர்க்குந் துணையாக வருவார் வலியையும்; தூக்கிச் செயல் - ஆராய்ந்து பார்த்துத் தன்வலி மிகுமாயின் அவ் வினையைச் செய்க.

இந் நால்வகை வலியுள், வினைவலி படையெடுத்துச் செல்லுதலும் தாக்குதலும் அரண் முற்றுதலும் அதைப் பற்றுதலும் ஆகிய வினைகளாலும், ஏனை மூன்றும் ஐவகை யாற்றல்களாலும் அளந்தாராயப்படும். அதன் முடிபாகத் தன்வலி மிகுந்து தோன்றுமாயின் வினை செய்வதென்று தீர்மானிக்கப்படும். அஃதன்றிக் குறைந்து தோன்றுமாயின் தோல்வி யுறுதி யென்றும், ஒத்துத் தோன்றுமாயின் வெற்றி ஐயுறவான தென்றும், தெரிந்து வினை கைவிடப்படும்.

472. ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில்.

(இ-ரை.) ஒல்வது அறிவது அறிந்து - தம்மாற் செய்தற்கியலும் வினையையும் அதன் தொடர்பாக அறியவேண்டிய தெல்லாவற்றையும்