பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

65



'பொள்ளென' என்பது விரைவுக்குறிப் பிடைச்சொல் வேர்த்தல் சினத்தாற் புழுங்குதல். அது இங்குச் சினத்தைக் குறித்தலால் கரணியம் (காரணம்) கருமியமாக (காரியமாக)ச் சார்த்திக் கூறப்பட்டது. வெளிப்படையாய்ச் சினங்கொள்ளின் பகைவர் தம்மைக் காத்துக்கொள்வ ராதலாலும், துணைவலியொடு திடுமென வந்து தாக்கலா மாதலாலும், 'புறம்வேரார்' என்றும், சினம் அடியோடு தணியின் போருக்கு வட்டங்கூட்டுதல் (ஆயத்தஞ் செய்தல்) நிகழாதாதலின் 'உள்வேர்ப்பர்' என்றும் கூறினார்.

488. செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை காணிற் கிழக்காந் தலை.

(இ-ரை.) செறுநரைக் காணின் - அரசர் தம்மினும் வலிய பகைவரைக் காணநேர்ந்தால் அவருக்கு நற்காலம் உள்ளவரை அவருக்குத் தாழ்ந்து பணிக: இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - அவர்க்கு முடிவுக்காலம் வரின் தலைகீழாக விழுந்து மாய்வர்.

பகைவரின் பகைமை யொழியும் வரை அவரைத் தலைமேற் சுமந்தாற்போல் மிகவுந் தாழ்ந்து பணிகவென்பார் 'சுமக்க' என்றும், அதனால் அவர் தம்மைக் காவாது நெருங்கிப் பழகுவ ராதலாற் காலமறிந்து தாக்கின் அவர் தப்பாது கெடுவரென்பார் 'கிழக்காந் தலை' என்றும் கூறினார். பணிதலைப் தலைமேற் சுமத்தலாகக் குறித்தமையால், பணியாது கொல்லுதலைத் தலைகீழாக விழுந்து சாகுமாறு தலையினின்று தள்ளுதலாகக் குறித்தார். இவ்விரு குறள்களாலும் காலம் வரும்வரை பகைமை தோன்றாம லிருக்குமாறு கூறப்பட்டது. கீழ் - கீழ்க்கு - கிழக்கு.

489. எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல்.

(இ-ரை.) எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு வாய்த்தற்கரிய சமையம் வந்து சேரின்; அந் நிலையே - அப்போதே; செய்தற்கு அரிய செயல் - அதுவரை செய்தற்கு அரிதாயிருந்த வினைகளைச் செய்துவிடுக.

தானாக நேர்ந்தாலொழிய எவ்வகையாலும் பெறப்படாமையின் 'எய்தற்கரியது' என்றும், அது நேர்வது அரிதாகலின் 'இயைந்தக்கால்' என்றும்,