பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66

திருக்குறள்

தமிழ் மரபுரை



அது நீடித்து நில்லாமையின் அந்நிலையே என்றும், அது நேராதவிடத்துச் செய்தற் கியலாமையின் 'செய்தற்கரிய' என்றும் கூறினார். ஏகாரம் பிரிநிலை.

490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து.

(இ-ரை.) கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேல் செல்லாதிருக்குங் காலத்து மீன் தேடுங் கொக்குப்போல் ஒடுங்கியிருக்க; மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - மற்றுச் செல்லுங்காலம் வாய்த்தவிடத்து அக் கொக்கு விரைந்து மீனைக் கொத்துவதுபோல் விரைந்து பகைவனைத் தாக்குக.

கூம்புதல் குவிதல். குவிதல் ஒடுங்குதல். மலரின் ஒடுக்கம் அரசரின் வினையொடுக்கத்திற்கு உவமமாயிற்று. "ஓடுமீ னோட வுறுமீன் வருமளவும் - வாடி யிருக்குமாங் கொக்கு" (மூதுரை, 16). தனக்கேற்ற மீன் வரும்வரை அது முன்னறிந்து தப்பாமைப் பொருட்டுத் தவஞ்செய்வான்போல் அசைவற்று நிற்றலும், அது வந்தவுடனே திடுமென்று கொத்துதலும். அரசன் காலம் வரும்வரை பகைவர் ஐயுறாவாறு அமைந்திருத்தற்கும் அது வந்தவுடன் விரைந்து வினை முடித்தற்கும். சிறந்த வுவமமாயின. இதனால் இருப்பு வினைகளின் இயல்பும் விளக்கமாயின.

அதி. 50 - இடனறிதல் அதாவது, வலியுங் காலமுமறிந்து பகைமேற் செல்லும் அரசன் தான் வெல்லுதற்கேற்ற இடத்தை யறிதல். அதிகார முறையும் இதனால் விளங்கும். இடம் - இடன். அது நிலமாகவோ அரணாகவோ இருக்கலாம்.

491.தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது.

(இ-ரை.) முற்றும் இடம் கண்டபின் அல்லது - பகைவரை முற்றுகை செய்வதற்கேற்ற இடம் பெற்றபின் னல்லது; எவ் வினையும் தொடங்கற்க - அவருக்கு மாறாக எவ்வினையையுந் தொடங்காதிருக்க; எள்ளற்க - அவரைச் சிறியரென்று இகழாதிருக்க.

முற்றுதல் வளைத்தல், அதற்கேற்ற இடமாவது, பெருவாயில்களாலும் திட்டிவாசல்களாலும் சுருங்கைகளாலும் பகைவர்க்குப் புகலும் போக்கு மில்லாவாறு அவர் நகரரணைச் சூழ்ந்து, நால்வகைப்படைகளும் அவற்றின்