பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

67



நடுவே பாதுகாப்பாக அரசனும் தங்கியிருத்தற்குப் போதியதும், உண்ணீர் அண்மையிலுள்ளதும், சதுப்பல்லாததும், படமாடங்களும் பாசறைகளும் ஒரே பகலில் அமைக்கக் கூடியதுமான நிலப்பரப்பாம்.

492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா மாக்கம் பலவுந் தரும்.

(இ-ரை.) முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலிமையோர்க்கும்; அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்ததனா லுண்டாகும் மேம்பாடு பல நலங்களையும் தரும்.

மாறுபாடாவது மாநிலம் எல்லார்க்கும் பொதுவென்னும் பகைவர் சொல்லைப் பொறாத அரசர் மனத்திலெழும் வயிரம். மாறுபாடும் வலியும் ஒருங்கே கூறியதனால், இது பகைமேற் சென்ற வல்லரசர் செயலாயிற்று. உம்மை உயர்வுசிறப்பு. அரண், ஆறும் மலையும்போல் இயற்கையும், அகழியும் மதிலும்போற் செயற்கையும் ஆக இருவகைப்படும். ஆக்கம் வலி மேம்பாடு. அது தரும் நலங்கள் பகைவரால் தமக்குத் தாக்குதலின்மையும் தாம் நிலையூன்றி அவரைத் தாக்கி வெல்லுதலுமாம்.

493. ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து போற்றார்கட் போற்றிச் செயின்.

(இ-ரை.) இடன் அறிந்து போற்றி - தக்க இடத்தைத் தெரிந்து தம்மைக் காத்துக்கொண்டு; போற்றார்கண் செயின் - பகைவரொடு போர் வினை செய்வராயின்; ஆற்றாரும் ஆற்றி அடுப - வலிமையில்லாதவரும் வலிமையராகி வெல்வர்.

தம்மைக் காத்தல், பகைவரால் துன்பம் தோல்வி கேடுகள் வராமல் அரணாலும் படையாலும் தம்மைக் காத்துக்கொள்ளுதல். தம்மை என்பதும் போர்வினை என்பதும் அவாய்நிலையான் வந்தன. உம்மை இழிவுசிறப்பு.

494. எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.

(இ-ரை.) இடம் அறிந்து துன்னியார் - தாம் வினைசெய்தற்கேற்ற அரணான இடத்தை யறிந்து அங்குச் சென்று தங்கிய அரசர்; துன்னிச் செயின் - அவ் விடத்தொடு பொருந்திநின்று வினை செய்வாராயின்; எண்ணியார்