உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

வேர்ச்சொற் கட்டுரைகள்

மடைநூல் = சமையற்கலை. “மடைநூற் செய்தியும்" (மணிமே. 2 : 22). மடைப்பள்ளி = அரண்மனை கோயில்களின் அடுக்களை. “அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி" (கல்லா. 23 : 37).

மடையன்

=

99

சமையற்காரன். "மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த

மடையனை (LD600F COLD. 21: 56).

மடையான் = மடையருகில் இரைதேடும் நீர்ப்பறவை வகை.

மடைகிடாய் முக்கந்தன் = இராமநாதபுர மன்புலத்தில், சிற்றூர்களைச் சுற்றிப் பார்க்கும் மேலதிகாரிகட்கு வேண்டிய உணவுப்பொருள்களைக் கொடுக்கும் அதிகாரி (Rd. M. 3/3)

மடைகழித்தல் = மதகு திறத்தல் (புதுவை).

மடைநிற்றல் = பெற்றம் (பசு) வேண்டும் போதெல்லாம் பால் சுரத்தல். இந்த மாடு மடைநிற்காது. (சென்னை)

-

மடை (சோறு) ஒ. நோ : OE mete, food, OS meti, mat, OHG maz, ON

matr, Goth mats, E meat.

மடு-மடம் - மாடம் = சுவரிற் பொத்தகம் முதலியன வைக்க உதவும் புரை அல்லது புரை வரிசை (Shelf).

=

மாடக்குழி சுவரில் எண்ணெய் விளக்கு வைக்கும் சிறுபுரை. மாடப்புறா=மாளிகை, கோயில். கோபுரம், பள்ளிவாசல் முதலியவற்றின் சுவர்ப்புரைகளில் வளர்க்கப்படும் பெரும் புறாவகை.

முள் - மொள் - மொண்டான் = நீர் மொள்ளுங் கலவகை. (இ.வ.)

மொள் மொண்டை மொந்தை = மொள் கலம். "நீர் மொள்ள மொந்தைக்கும் வழியில்லை" (அருட்பா, V, கந்தர் சரண. தனிப்பர். 2.) 2.கள் மொண்டு வார்க்கும் அளவைக் கலம். 3. சிறு மரப்பாண்டம். 4. ஒரு கட்பறைவகை. (பிங்.)

ம்

ம. மொந்த, க. முந்தெ, தெ. முந்த (t)

மொண்டை - மண்டை= 1. நீர் மொள்ளும் மட்கலம். “காதல னடி நீர் சுடு மண்டையின்...மாற்றி" (சிலப். 16 : 39). 2. ஒரு முகத்தலளவை. (தொல். தொகை. 28, உரை.) 3. இரப்போர் கலம். "புலரா மண்டை... கொழுநிணம் பெருப்ப" (புறம். 103). 4. இரப்போர் கலம் (கப்பரை) போன்ற தலையோடு. 5. தலையோடுள்ள தலைப்பகுதி. 6. தலை. “செவ்வா யனைத்தான் வணங்கா மண்டை யிருக்கும்" (அஷ்டப். திருவேங்கடத்தந். 61.) 7. இளவரசன் மகுடம். மண்டை கவித்தல் = இளவரசுப் பட்டங்கட்டுதல்.

ம. மண்ட, க. மண்டெ.

மொள்-மோள். மோளுதல் = துளையினின்று சிறுநீர் பாய்ச்சுதல், அல்லது கழித்தல்.