உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




95

வல்' (வளைவுக் கருத்துவேர்) 3.மரக்கால் (பிங்.). 4. நான்மரக்கால் கொண்ட அளவு (W.). 5. நான்கு அல்லது எட்டுப்படி கொண்ட அளவு. 6. சிறு தோணி. "வள்ளப் பட்டன மகர கடலென” (கம்பரா. அட்சகு. 28).

வள்ளக்கால் வளைந்த கால் (இ.வ).

வள்-வள்ளி

=

1. கொடி. “வாடிய வள்ளி முதலரிந் தற்று" (குறள். 1304)

2. கொடிபோன்று தொடர்ந்து இருப்பது 'மேக வள்ளி' (தொல். புறத். 33, உரை). வள்ளி- வள்ளியம் = மரக்கலம் (சது.).

வள்-வளவளவு = வீட்டுச் சுற்றுப் பரப்பு, வீட்டுத் தொகுதி, வீடு. "வளவிற் கமைந்த வாயிற் றாகி" (பெருங். இலாவாண. 6:77). 2. வீட்டுப் புறம். (W.).

வள-வளர்-வளரி = பிறைபோல் வளைந்த வளரித்தடி (boomerang). வளவளா = சுற்றுப் பரப்பு. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள். 523)

வளா – வளாவு. வளாவுதல் = 1. சூழ்தல். "இளவெயில் வளாவ" (பரிபா. 15. 27), "மகோததி வளாவும் பூதலம்" (கம்பரா. தேரேறு. 42). 2. சுற்றி மூடுதல். "பைந்துகில்...வெம்முலைமேல் வளாய்" (சீவக. 2634).

66

வளா + அகம் = வளாகம் = 1. வளைக்கை, சூழ்கை (சூடா.). 2. சூழ்ந்த இடம், இடம். "புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுட் சென்றிலேன்' (தேவா. 1193:1). 3. கடல் சூழ்ந்த உலகம். "முந்நீர் வளாக மெல்லாம்" (கலித். 146). 4. நிலப்பெருங் கண்டம். “ஏழ்பெரு வளாக வேந்தர்" (கம்பரா. திருமுடி. 6). 5. தேசம். "வேறோர் வளாகம் துற்றான்.... வணிகன்” (கந்தபு. மார்க். 142). 6. தினைப்புனப் பரப்பு. "குன்றும் யாறுங் குவடும் வளாகமும் (குற்றா. தல. வேடன் வலம். 28). 7. தோட்டம்.

=

வளா வளாஞ்சி = வளார், (இ.வ)

வள்

வளி = வளைந்து வீசுங் காற்று. "வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி" (குறள். 245). 2. உடம்பிலுள்ள ஊதைக் கூறு. "வளிமுதலா வெண்ணிய மூன்று” (குறள். 941).

வள – வளை. வளைதல் = 1. கோணுதல். 2. குனிந்து தாழ்தல். "முற்ற மூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து” (திவ். பெரியதி. 1:3:1). 3. தோற்று வணங்குதல். "வளையா வயவரும்" (பு. வெ. 7. 18). 4. திடமறுதல் (சீவக. 1068, உரை.) 5. செங்கோல் வளைவது போன்று ஆட்சி நேர்மையினின்ற விலகுதல். "வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்" (சிலப். 19:16). 6. வருந்துதல். உடம்பு வளைந்து வேலை செய்வதில்லை. (உ.வ.). "வளையார் பசியின்" (பதினொ. திருவிடை. மும்மணிக். 27). 7. சுற்றுதல்.