உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

வேர்ச்சொற் கட்டுரைகள்

(செ. குன்றாவி.) 1. சூழ்தல். "வளைகடல் வலையிற் சூழ்ந்து" (சீவக. 1115). 2. சுற்றி வருதல். “வையக முழுதுடன் வளைஇ" (புறம். 69).

வளைய வளைய = திரும்பத் திரும்ப.

வளைத்தல் = 1. வளையச்செய்தல். 2. சூழ்தல். "இருமுட் புரிசை யேமுற வளைஇ" (முல்லைப். 27). 3. தடுத்தல். "வள்ள னீங்கப் பெறாய் வளைத்தேனென" (சீவக. 889). 4. பற்றுதல். 5. கவர்தல். கொள்ளைக்காரர் எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு போய்விட்டார்கள் (உ.வ). 6. சொன்ன சொல்லை மாற்றுதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான் (உ.வ.). 7. வளைத்து எழுதுதல். "உருவப் பல்பூ வொருகொடி வளைஇ" (நெடுநல். 113). 8 அணிதல். “சடைமுடிமேல் முடிவெண்டிங்கள் வளைத்தானை” (தேவா. 871

1).

=

வளை = 1. வளையல். "முன்கை யிறையிறவா நின்ற வளை” (குறள். 1157). 2. சக்கரப்படை. "தாங்கணைப் பணிலமும் வளையும்" (கம்பரா. உருக்காட்டுப். 43). 3. சங்கு "வளையொடு புரையும் வாலி யோற்கு" (பரிபா. 2:20). 4, வட்டத்துளை, எலி நண்டு முதலியவற்றின் வளை. 5. சுற்றிடம். "பரமேச்சுர மங்கலத்து ளகப்பட்ட வளையில்" (S.I.Li, 151; 72).

66

கபளெ (b)

வளை – வளையம் = 1. வட்டம் (அக. நி.). 2. கைவளை (W.) 3. முடியிற் சூடும் வளையமாலை. 4. தாமரைச் சுருள் (பிங்). 5. சுற்று. 6. ஒரு கோள் வானமண்டலத்தை ஒருமுறை சுற்றிவருங் காலம். 7. குளம் (W.).

வளையம் வ. வலய.

ளை வளையல் = 1. வளைவுள்ளது. (யாழ். அக.). 2. கைவளை. வளையல் விற்ற படலம்.

-

வளை வளைவு = கோணல். 2. கட்டடத்தில் அமைக்கும் வில்வடிவு. 3. வட்டம். 4. சுற்று. 5. வீட்டுப்புறம் (W.). 6. பணிவு (யாழ். அக.). வளைவி = 1. வீட்டிறப்பு. 2. வளையல்.

வளை-வனை. வனைதல் = 1. சக்கரத்தைச் சுற்றி மட்கல மமைத்தல். வனைகலத் திகிரியும்" (சீவக. 1839). 2. சித்திரமெழுதுதல். "வனையலாம் படித்தலா வடிவிற்கு" (சீவக. 709).

வள்

=

வண் வண்ணம் 1. வளைத்தெழுதுகை. 2. எழுதும் ஓவியம்.3. எழுதும் எழுத்து. 4. சித்திர மெழுதுங் கலவை. “பலகை வண்ண நுண் டுகிலிகை" (சீவக. 1107). 5. கலவை நிறம். 6. நிறம். "வெளியார்முன் வான்சுதை வண்ணங்கொளல்" (குறள். 714). "வண்ணம் வடிவே அளவே சுவையே" (தொல். வேற். 17). 7. ஓவிய அழகு. 8. அழகு. "பிறைநுதல் வண்ண மாகின்று" (புறம்.1). 9. இயற்கை யழகு. “வண்ணமுந் தேசு மொளியுந் திகழ” (பரிபா. 12 : 20). 10. செயற்கை யழகு, ஒப்பனை (அக. நி.). 11. சிறப்பு.