உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

வல்' (வளைவுக் கருத்துவேர்)

97

"கைவண்ண மிங்குக் கண்டேன்" (கம்பரா. அகலிகை. 82). 12. நன்மை (யாழ். அக.) 13. குணம். "நிரலுடைமையும் வண்ணமுந் துணையும்” (குறிஞ்சிப். 31). 14. வடிவு (பிங்.). 15. குலம் (தொல். புறத். 27, உரை). 16. இனம். “வண்ணம் வண்ணத்த மலர்” (குறிஞ்சிப். 114). 17. வகை. “தலைச்செல்லா வண்ணத்தால்" (குறள். 561). 18. ஓசைவகை. “வண்ணந் தானே நாலைந் தென்ப" (தொல். செய். 210). 19. சிறந்த ஓசைவகைப் பாட்டு, வண்ணத்திரட்டு. 20. முடுகிய ஓசையுள்ள கலியுறுப்பு. முடுகியல் (பிங்.) 21. இன்னிசைப் பண் (இராகம்) (சது.) 22. இன்னிசைப் பாட்டு. “கோதை தானே யிட்ட தோர் வண்ணந்தன்னை" (சீவக.

1996.)

ஒ. நோ : தில் - திள் - திண் - திண்ணம்.

வண்ணம்

வண்ணம்

பிரா. வண்ண.

வண்ணன் = நிறத்தன்.

டு : அழல்வண்ணன், கார்வண்ணன். ஒ. நோ : திண்ணம் - திண்ணன்.

=

வண் வண்ணி, வண்ணித்தல் ஓர் ஓவியத்தைப் பல்வேறு நிறங்களாலும் நுண்வினைகளாலுஞ் சிறப்பிப்பதும், ஓர் அணிகத்தை (வாகனத்தை)ப் பன்னிற அழகிய பொருள்களாற் சுவடிப்பதும், ஒர் உடம்பைப் பன்னிற ஆடையணிகளால் அழகுபடுத்துவதும் போன்று, இறைவனை அல்லது ஒரு தவைனைப் பல்வேறு கருத்துகளாலும் பல்வகைச் செய்யுளுறுப்புகளாலும் சிறப்பித்துப் புகழ்தல்; அல்லது, பொருளிடங் காலங்களுள் ஒன்றன் இயல் செயலுறுப்புக ளெல்லாவற்றையும் விளத்தமாக (விவரமாக) எடுத்துக் கூறுதல்.

ஒ. நோ : திண்ணம் - திண்ணி - FE.

வண்ணி

-

வண்ணகம் = 1. வண்ணித்துப் புகழ்கை. “வண்ணித்துப் புகழ்தலின் வண்ணக மெனப்படும்" (தொல். செய். 140, உரை). 2. ஒரு கலிப்பா வுறுப்பு.

வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா = தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னுங் கலியுறுப்பாறும் வந்து, முழு நிறைவாகும் கலிப்பா என்னும் பாவகை.

ஒருவன் தன் காதலை வெளிப்படுத்தற்கும், கடவுளை வழுத்தற்கும், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாப்போல் மிகப் பொருத்தமான செய்யுள் வகையை வேறெம் மொழியிலுங் காண வியலாது.

ஒ. நோ : திண்ணம் - திண்ணகம்.

வண்ணி வண்ணனை = வண்ணித்துப் புகழ்கை.

வண்ணக்கம்மர் = 1. வண்ணப்பூச்சு வினைஞர், வண்ணவோவியர். “வத்தநாட்டு வண்ணக் கம்மரும்" (பெருங். உஞ்சைக் 58 : 44).