உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

வேர்ச்சொற் கட்டுரைகள்

வண்ணக்கன் = காசு நோட்டகன் (நாணய சோதகன்). வண்ணக்கன்

சாத்தனார் (நற்.). வடம வண்ணக்கன் தாமோதரனார் (புறம். 172). பொற்காசை உரைத்துப் பார்த்து அதன் மாற்று வண்ணத்தால் (நிறத்தால்) காசின் இயல்பை யறியும் நோட்டக்காரன், வண்ணக்கன்.

66

வண்ணமாலை = நெடுங்கணக்கு (சங். அக.) வண்ண மகள் = கோலஞ் செய்பவள்.

வண்ணத்தான் = வண்ணான், ஆடையழுக்க கற்றி வண்ணஞ் செய்பவன்.

வண் - வணர். வணர்தல் = 1. வளைதல். “வணர்ந்தேந்து மருப்பின்” (மலைபடு. 37). மயிர் குழன்றிருத்தல். "வெறிகமழ் வணரைம்பால்” (கலித். 57).

வணர் = 1. யாழ்க்கோட்டின் வளைந்த பகுதி. “வணரளவு சாணும்” (சிலப் பாயி. 9). 2. கட்டட வேலை வளைவு (W.)

வணர் வணரி = வளரித்தடி. இனி, வளரி - வணரி என்றுமாம்.

வண் வண வணங்கு. வணங்குதல் = 1. வளைதல். 2. நுடங்குதல். வணங்கிடை" (பு.வெ.7:27). 3. பணிந்தடங்குதல். "வணங்கிய வாயினர்" (குறள். 419). 4. ஏவற்றொழில் செய்தல். "நம்மில் வந்து வணங்கியும்" (கலித்.76).

66

(செ.குன்றாவி) 1. வழிபடுதல். "எண்குணத்தான் றாளை வணங் காத்தலை” (குறள். 9). 2. சூழ்ந்துகொள்ளுதல் “வணங்குமிப் பிறப்பிவை நினையாது" (திருவாச. 41 : 6).

க. பக்கு (baggu)

வணங்கு

=

வணங்கி, பொழுதுவணங்கி கதிரவனை நோக்கி

வளையும் பூ (சூரியகாந்தி).

வணங்கார் = பகைவர்.

வணங்கு-வணக்கு. வணக்குதல் = 1. வளைவித்தல். 2. பணியச் செய்தல். "மழபுலம் வணக்கிய மாவண் புல்லி” (அகம். 61).

தெ. வந்த்சுட்ட (vantsuta), க.பக்கிசு (baggiu).

வணக்கு வணக்கம் = 1. வளைகை. "வில் வணக்கந் தீங்கு குறித்தமையான்” (குறள். 827). 2. வழிபாடு. "குறைவிலா வென்னெடு வணக்கங் கூறி” (கம்பரா. தைல. 38). 3. நூன்முகத்திற் கூறும் கடவுள் வணக்கம். “வாழ்த்தும் வணக்கமும் பொருளியல் புரைத்தலு மென மூவகைப்படும்” (சி. போ. பா மங்க. பக். 1). 4. கண்ணியப்படுத்துகை (யாழ். அக.).

வணக்கு வணக்கி, யானை வணக்கி = யானத் துறட்டி.