உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வல்' (வளைவுக் கருத்துவேர்)

99

வணங்

கு வங்கு

முதலியவற்றின் வளை.

வங்கு - வங்கி :

(வங்கி நெளிவு).

1. கப்பலின் விலாச் சட்டங்கள் 2. எலி

= 1. நெளிவளையல். 2. நெளிவாள், 3. நெளி மோதிரம்

தெ., க. வங்கி (nk), து. வக்கி (gg).

வங்கு வங்கம் = 1. வளைவு 2. ஆற்று வளைவு (யாழ். அக.) 3. வளைந்த அல்லது வட்டவடிவமான கப்பல். “வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்” (மதுரைக். 536)

வங்கு - வங்கியம் = வளைந்த ஊதிசைக் கருவி. “வங்கியம் பல தேன் விளம்பின" (கம்பரா. கைகேயி. 60). இயம் = இசைக்கருவி.

வங்கு - வங்கா = 1. வளைந்த ஊதுகொம்பு (W.). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவை. "வங்காக் கடந்த செங்காற் பேடை" (குறுந். 151), வளைந்த தாரை.

வங்கு - வாங்கு. வாங்குதல். = (செ. குன்றாவி) 1. வளைத்தல் "கொடுமரம் வாங்கி" (கல்லா. 4). 2. வளைத்து நாண்பூட்டுதல். “நாண்வாங்கலாது விற்கொண்டு” (இரகு. திக்குவி. 231). 3. வளைத்து இழுத்தல், இழுத்தல், “மத்த மொலிப்ப வாங்கி, (பெரும்பாண். 156). 4. மூச்சு இழுத்து உட்கொள்ளுதல். மூச்சு வாங்குகின்றான் (உ. வ.). 5. கொள்ளுதல், ஏற்றல் “வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும்" (திருவாச. 5 : 68). 6. விலைக்குக் கொள்ளுதல். "மாதவி மாலை கோவலன் வாங்கி" (சிலப். 3 171). 7. பெறுதல். "எங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே" (தேவா. 456 : 8). 8. இழுத்துவரைதல். ககரத்துக்குக் கால் வாங்கினாற் காவாகும். (உ.வ.). 9. இழுத்து ஒதுக்குதல். இந்த வண்டி போகும்படி அந்த வண்டியை வாங்கிக்கொள் (உ.வ.). 10. வில் நாணிழுத்து அம்பைச் செலுத்துதல். "வாங்கினார் மதின்மேற் கணை (தேவா. 21 : 2) 11. இழுத்து உய்வித்தல் "சமணர் பொய்யிற் புக்கழுந்தி வீழாமே போத வாங்கி" (தேவா. 658 7). 12. ஒதுக்கி நீக்குதல். "வாங்குமின் மனத்துயர்" (கம்பரா.மீட்சிப். 278). 13. பிரித்தெடுத்தல். “தானே என்றார், புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின்" (தொல். புறத். 1, உரை), 14. பெயர்த்தல். புற்றம் வாங்கிக் குரும்பி கெண்டும்" (அகம். 72). 15. ஒடித்தல் “வேழ...கரும்பின் கழைவாங்கும்" (கலித். 40). 16. வெட்டுதல். கை கால்களை வாங்கிவிடுவேன் (உ.வ.). 17. பிரம்பை வளைத்து அடித்தல். பிரம்பை யெடுத்து அவனை நாலு வாங்கு வாங்கினான் (உ.வ.).18. அழித்தல். “விண்ணு மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்" (திருவாச. 5 : 96).

66

(செ. வி.). 1. வளைதல் "வாங்குகதிர் வரகின்" (முல்லைப் 98). 2. வளைந்து அசைதல். "வளிவாங்கு சினைய மாமரம்" (பரிபா. 7: 14). 3. குலைதல். பகைவர் தண்டுவாங்கிப் போயிற்று (W.). 4. மெலிதல்.