உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

வேர்ச்சொற் கட்டுரைகள்

ரை

உடம்புவாங்கிப் போயிற்று (உ.வ.). 5. உள்ளிழுத்தல். மழைத் தண்ணீ யெல்லாம் நிலம் வாங்கிக்கொண்டது (உ.வ.). 6. குறைதல். வீக்கம் வாங்கியிருக்கிறது (உ.வ.). 7. ஒதுங்குதல். 8. பின்வாங்குதல். "விரைவின் வாங்கி...பிழைத்த சேனை பின்வர” (திருவாலவா.49 : 20). 9. திறத்தல், அந்தக் கடையின் கதவு ஒருபுறம் வாங்கியிருந்தது (உ.வ.).

ம. தெ. வாங்கு.

வாங்கு = 1. வளைவு (நாமதீப. 768). 2. பிரம்படி. பிரம்பையெடுத்து அவனை நாலு வாங்கு வாங்கு (உ.வ). 3. சொல்லடி வசவு. அவள் வாங்கின வாங்கு அவள் வாழ்நாளுக்குப் போதும் (உ.வ). 4. வங்கி. க. பாகு (g) வளைவு.

=

வாங்கு - இ. பாங்க் (வங்கி).

வாங்கு வாங்கம் = வளைந்த கடல். வாங்கம்-வ. வாங்க (vanka). வாங்கறுவாள் = வளைந்த அறுவாள்.

வாங்கு வாங்கா = வளைந்த ஊதுகொம்பு அல்லது தாரை. வாங்கா -உ. பாங்கா (nk).

வாங்கு வாங்கல் = நெடுந் தொலைவு. காவேரிப் பாக்கத்திலிருந்து சுங்குவார் சத்திரம் ஒரு பெரு வாங்கல் (உ.வ.)

66

வாங்கல் = இழுத்தல். இழுததல் = நீளுதல், நீளச்செய்தல்.

வாங்குபிடித்தல் = பொருத்து விட்ட அல்லது பிளந்துபோன இரு பகுதிகளை இழுத்துத் தகட்டால் இணைத்தல்.

வள் – வள்கு – வட்கு. வட்குதல் = வளைதல், வணங்குதல், தாழ்தல், 'வாடிய காலத்தும் வட்குபவோ" (பழ. 204).

வட்கார் = வணங்கார், பகைவர். "வட்கார் நிரையன் றழலெழ வெய்து நின்றோன்" (திருக்கோ. 152).

வட்கு – வக்கு = 1. மூத்திரக் குண்டிக்காய். 2. உருண்டையான விதைக் கொட்டை., ப்ரா. வக்க, வ. வ்ருக்க.

வக்கு வக்கா = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை வகை. “வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே" (குற்றா. குற. 93 : 2).

-

ஒ. நோ : கொள் கொள்கு கொட்கு கொக்கு = வளைந்த கழுத் துள்ள நீர்ப்பறவை.

வக்கா - வ. பக (baka). வ.பக

வக்கு – வக்கரம் வக்கரி. வக்கரித்தல் = கோணுதல், வளைதல், மடங்குதல், மடங்கித் திரும்புதல், ஆளத்தி செய்தல்.

66

வண்-வண்டு=1. கைவளை. 'கைவண்டுங் கண்வண்டு மோடக் கலையோட” (ஆதி உலா. 98). 2. சங்கு (பிங்.). 3. பெருவிரலும் அணிவிர