உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வல்' (வளைவுக் கருத்துவேர்)

101

லும் வளைந்து நுனியொன்றச் சிறுவிரல் நிமிர்ந்து, சுட்டுவிரலும் நடுவிரலும் நெகிழ வளைந்து நிற்கும் இணையா வினைக்கை வகை. (சிலப். 3 18, உரை). 4. தேன் மலரைச்சுற்றி வட்டமிடும், வண்டு கரும்பு தேன் ஞிமிறு என்னும் நால்வகைப்பட்ட அறுகாற் சிறு பறவை. "யாழிசை கொண்ட வினவண் டிமிர்ந்தார்ப்ப” (கலித். 131). “வண்டுகாள் மகிழ் தேனினங்காள்" (சீவக. 892). 5. தவசம் அளக்கும்போது கீழே விழுவதைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற் புரிவளையம். 6. வழிப்போக்கில் மாடுகளின் உணவிற்காக வண்டிக் கூண்டைச் சுற்றித் தொங்கவிடும் வைக்கோற் பழுதை.

வண்டு கட்டுதல் = பானையின் வாயைச் சுற்றிச் சீலையால் மூடிக் கட்டுதல்.

வண்டு விடுதல் = வைக்கோலைப் புரியாகத் திரித்தல்.

வண்-வண்டன் = வட்ட நறுக்கம் (விருத்த சேதனம்) செய்யப் பட்டவன் (யாழ். அக.)

வண்டு - வண்டி= 1. சக்கரம். 2. சகடம். 'வண்டியை யேறினாள்' (சீவக. 2054, உரை). 3. ஒரு வண்டிப் பொறை (பாரம்).

ம. வண்டி, தெ., க. பண்டி.

டி

சகடம் என்னும் பொருளில், வண்டி என்னுஞ் சொல் பண்டி என்பதன் திரிபாகத் தெரிகின்றது. ஏனெனின், பண்டி என்னும் வடிவே சீவக சிந்தாமணி மூலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், பாண்டி, பாண்டில் என்பவற்றை யொத்த வகர முதற்சொற்கள் இருவகை வழக்கிலுமில்லை. ஒருகால்,வண்டியென்னும் வடிவே தொன்றுதொட்டு உலக வழக்காயிருந் திருக்கலாம். வண்டி யென்னும் வடுக கன்னட வடிவம், வகர பகரத் திரிபின் விளைவாம்.

வண்டு

வந்து

=

வளைந்து வீசுங் காற்று. "வந்தெனக் கந்தனூற்

கணைதொடா” (கந்தபு. சூர. வதை. 188).

-

வள் வட்டு. ஒ. நோ : கள் - கட்டு, பள் - பட்டு. கள்ளுதல் = கூடுதல், சேர்தல், பொருந்துதல், ஒத்தல்.

கட்டுதல் = ஒன்றுசேர்த்தல்.

பள்ளுதல் = பளபளப்பாதல் (வழக்கிறந்த வினை).

பள்-பள-பளபள-பளபளப்பு.

பள்-பளி-பளிச்சு. பளிச்செனல் = ஒளி வீசுதல். பளி-பளிங்கு. பட்டுப் பட்டெனல் = நிலவொளி விளங்குதல்.

வட்டு = 1. வட்டில். 2. பாண்டி விளையாட்டிற்குரிய வட்டச்சில்.3. சூதாட்டிற்குரிய வட்டக் கருவி. "கையாடு வட்டிற் றோன்றும்" (அகம். 108) 4. குடைக்கம்பிகள் கூடும் சிறு சக்கரம். 5. வட்டப் பனைவெல்லக் கட்டி. 6.