உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

வேர்ச்சொற் கட்டுரைகள்

திரட்சி (சூடா.) 7. திரண்டபொருள், “முட்டி வட்டனைய கோல முத்துலாய்" (சீவக. 2950).

வட்டெழுத்து = வளைந்த தமிழெழுத்து வகை.

66

வட்டணை = வட்டமான மெத்தை யணை வட்டணை... இரீ யினாரே" (சீவக.2433)

=

வட்டு-வட்டம் (பெ.) 1. வளைவு. “வில்லை வட்டப்பட வாங்கி' (தேவா. 5: 9).2. ஒருவகை வளரித்தடி. "புகரிணர்சூழ் வட்டத் தவை” (பரிபா. 15 : 61), (பிங்.). 3. தோட்கடகம் (வாகுவளையம்). 4. வண்டிச் சக்கரம் (யாழ். அக.) 5. குயவன் சக்கரம் (பிங்.). 6. கதிரவனையுந் திங்களையுஞ் சூழும் கோட்டை (ஒளிவளையம்) 7. அப்பவகை. "பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம்' (பெரும்பாண். 378). 8. கேடகம். "ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப" (திருமுருகு. 111). 9. துலைத்தட்டு. "வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே” (திருமந். 1781). 10 ஆலவட்டம். “செங்கேழ் வட்டஞ் சுருக்கி” (நெடுநல் 58). 11.வட்டப்பாறை. “வடவர் தந்த வான்கேழ் வட்டம்" (நெடுநல். 51). 12. தையிலையின் நடுப்பாகம். 13. கைம்மணி (பிங்.). 14. நீர்ச்சால் (பிங்.). 15. கொள்கலம் (யாழ். அக.). 16. குளம் (பிங்.). 17. வட்டமரம் (W.). 18. களத்திற் சூடடிப்பதற்கு வட்டமாகப் பரப்பியநெற்கதிர் (நாஞ்.) 19. சில வூர்களைக் கொண்ட நாட்டுப் பிரிவு. 20. சுற்றியுள்ள நிலப்பரப்பு. "கோயில் வட்டமெல்லாம் " (சீவக. 949). 21. வட்டச் செலவு. "தார் பொலி புரவிவட்டந் தான்புகக் காட்டு கின்றாற்கு" (சீவக. 442), 22. ஒரு சுற்று (W.). 23. ஒரு கோள் வானமண்டலத்தை ஒருமுறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழ வட்டமாயிற்று (உ.வ.). 24. திருத்தம். வட்டமாய்ப் பேசினான். (இ.வ.). 25. தடவை. "விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து" (விநாயகபு. 74. 214). 26. (இடை). தோறும். ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு...பலிசை. (S.I.I.II. 122:27)

வட்டம் - பிரா. வட்ட, வ. வ்ருத்த. L. vert, vers.

வட்டமணியம்

வட்டம்

-—

=

நட்டாண்மை. வட்டங் கூட்டுதல் = அணியமாதல்.

வட்டகை = 1. சிறுவட்டில். “செம்பொற் றூமணி வட்டகை யோடு" (காஞ்சிப்பு. தழுவக். 333). 2. சிறுகிண்ணம். “கொடியனார் வெள்ளி வட்டகை யூன்றிவாய் மடுப்ப" (சீவக. 938). 3. நிலப் பரப்பு. "ஊர் நாற்காத வட்டகை” (சிலப். 5 : 133, உரை). 4. அடைப்புக் கட்டிய நிலம் (W.). 5.சுற்றுப்புறம். 6. நாட்டுப் பிரிவு.

வட்டகை மணியம் = வட்டமணியம் (W.).

வட்டம் வட்டணம் = 1. வட்டக்கேடகம். “இட்ட வட்டணங்கள் மேலெறிந்த வேல்" (கலிங். 413) 2. நெடுவட்டக் கேடகம் (யாழ். அக.) வட்டணம் - வ. அட்டன.