உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வல்' (வளைவுக் கருத்துவேர்)

வட்டணம் வட்டணி.

வட்டணித்தல்

வட்டணிப்பு

=

=

1. வட்டமாதல். 2. வட்டமாக்குதல்.

66

103

வட்டமாயிருக்கை. 'குண்டல மென்று வட்

டணிப்பைச் சொல்லவுமாம்" (திருவிருத்.57, வியா. ப. 318).

வட்டணம் வட்டணை = 1. வட்ட வடிவம். "வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த சிலந்தி" (தேவா. 507 2). 2.கேடகம். "மன்னவர் காண வட்டணைவா ளெடுத்து" (கல்லா 48 8). 3. தாளக்கருவி. “கொம்மைக் குயவட்டணை கொண்டிலனோ" (கம்பரா. அதிகாயன். 9). 4. தாளம் போடுகை (பிங்.). 5. அடிக்கை (அரு. நி.). 6. உருண்டை. 7. இடசாரி வல சாரியாகச் சுற்றுகை. "சுற்றிவரும் வட்டணையிற் றோன்றாவகை கலந்து" (பெரியபு. ஏனாதி. 29), 8. வட்டமான செலவு. "மாப்புண்டர வாசியின் வட்டணைமேல் (கம்பரா படைத். 97). 9. தொழுதற்கு அறிகுறியாகத் தாமரை மொட்டுப் போலக் கைகளைக் குவிக்கை. “வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி” (மணிமே 7 : 43). 10. வக்கணை. “வட்டணை பேசுவர்" (பதினொ.கோபப்பிர. 85). வட்டம் - வட்டரவு - வட்டவடிவு (யாழ்ப்).

வட்டு – வட்டறவு = முடிவாக அறுதியிடுகை (யாழ். அக.)

வட்டம் - வட்டன் = (பெ.) உருண்டு திரண்ட வுடம்பினன். “குறுவட்டா நின்னி னிழிந்ததோ கூனின் பிறப்பு” (கலித் 94 : 27).

(இடை) தோறும். “ஆட்டை வட்டன் முக்குறுணி நெற்பொலிசை யாக

(S.I.I.II, 69:3).

வட்டம் வட்டா = வாயகன்ற வட்டக் கலவகை. "வட்டாவுந் தாம்பூலமுந் துகிலுந் தாங்கி நிற்ப" (சீதக்)

வட்டம் வட்டாணி = திறமை, சமர்த்து, (திருவிருத். 71. அரும், ப. 371.)

தெ.வட்டாரி.

வட்டம் - வட்டாரம் = 1. சுற்றுப்புறம். 2. நிலப் பரப்பு.

தெ. வட்டாரமு, து. வட்டார, க. வட்டர.

""

வட்டு – வட்டி. வட்டித்தல் = (செ.கு.வி.) 1. வட்டமாதல். (யாழ். அக.). 2. சுழலுதல். “வட்டித்துப் புயலே றுரைஇய வியலிரு ண்டுநாள்” (அகம். 218).3. தாளவொற்றறுத்தல் (சூடா.) 4.சூளுரைத்தல். “வட்டித்து விட்டா ளெறிந்தாள்” (சிலப். 21 : 45).

(செ. குன்றாவி). 1. வளைத்தல் (இலக். அக.). 2. வளைத்து எழுதுதல் (சிலப். 21 : 46, அரும். 3. சுழற்றுதல். "மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து (புறம், 42). 4. உருட்டுதல். “கழகத்துத் தவிராது வட்டிப்ப” (கலித். 136).