உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

வேர்ச்சொற் கட்டுரைகள்

5. சுற்றிக் கட்டுதல். “அலகில் மாலை யார்ப்ப வட்டித்து (புறம். 394). 6. பரி மாறுதல் (W.).7. தோள் புடைத்தல். "செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார்’ (பழ .326)

வட்டி = 1. கடகப் பெட்டி. "வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியும்” (புறம். 33). 2. கூடை “பல்கல வட்டியர்” (அகம். 391). 3. நாழி. (தொல்.எழுத்து. 170), 4. கிண்ணம் (அக. நி.). 5. ஒரு விருது.

வட்டி – வட்டிகை = 1. வட்டம் (யாழ். அக.). 2. சுற்றளவு 3.கூடை (பிங்.). 4. கைம்மணி (யாழ். அக.). 5. ஒடவகை. “துள்ளியல் வட்டிகை துடுப்பிற் கடைஇ" (பெருங், உஞ்சைக். 40 : 46), 6. ஒருவகை விருது. “அலகில் வட்டிகை தழல் விழித்தலால்" (கலிங். 333). 7.சித்திர மெழுதுங் கோல் "வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் (மணிமே. 4 : 57). 8. சித்திரம். “வட்டிகைப் பாவை நோக்கி" (சீவக. 2085)

வட்டிப்பு = 1. வட்டம். (யாழ். அக.). 2.சூள் (நாமதீப.667).

வட்டி வட்டில் = 1 வட்டமான (வெண்கல) உண்கலம். 2.கிண்ணம். பொன வட்டில் பிடித்து” (திவ். பெருமாள். 4 : 3). 3. நாழி (தொல். எழுத்து. 170 : இளம்பூ.) 4. நாழிகை வட்டில். 5. அம்புக் கூடு. “வாளி வட்டில் புறம்வைத்து” (கம்பரா. தேரேறு. 39). 6. கூடை (அக. நி.). 7. ஒருவகை விருது. “ஏறுமால் யானையே சிவிகை யந்தளக மீச்சோப்பி வட்டில்" (தேவா. 692:7). 8. அப்பளஞ்செய்ய உருட்டி வைக்கும் மாவுருண்டை. (இ.வ.).

௧. பட்டலு (b)

வட்டிற்பூ = தாமரைப்பூ.

வட்டு வட்டை = 1. வேங்கையின் உடல்வரி (W.) 2. சக்கரத்தின் மேல் வளைமரப் பலகை. “உருள்கின்ற மணிவட்டை" (சிலப். 29, உரைப்பாட்டு மடை). 3. தேர் (யாழ். அக.) 4. நிலப்பரப்பு. 5. வட்டப் பக்கா என்னும் பட்டணம் படி. (நாஞ்).

வட்டக் கருத்துச் சொற்களுள் வட்டு, வட்டகை, வட்டணி, வட்டணை, வட்டரவு, வட்டா, வட்டாணி, வட்டாரம், வட்டித்தல், வட்டில், வட்டை என்னும் வடிவுகள் வடமொழியில் இல்லை. வட்டம் என்பது வ்ருத்த என்னும் வடிவிலும் வட்டணம் என்பது அட்டன (ந) என்னும் வடிவிலும் வழங்குகின்றன. ஏனையவற்றிற் கெல்லாம் வ்ருத்த என்பதையே மூலமாகக் காட்டுவது எத்துணையும் பொருந்தாது.

வட்டை-வடை = தேர்ச்சக்கர வடிவாகச் செய்யப்படும் உழுந்துப் பலகாரம்.

வடை-வ. வடா.

வடை-வடையம் = 1. நெல்லக்கனி முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை. 2. பொட்டலமாகக் கட்டிய வெற்றிலை பாக்கு (தஞ்.).