உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வல்' (வளைவுக் கருத்துவேர்)

105

வட்டம்-வடம் = 1. வட்டவடிவம் (அக. நி.). 2.). வட்டமாகப் படரும் ஆலமரம். "வடநீழற் கண்ணூ டிருந்த குருவே" (தாயு . கருணா. 1). 3. திரண்ட கயிறு, கமலை வடம், தேர் வடம், 4. திரண்டபொன்நாண். மணிவடம். “வடங்கள் அசையும்படி உடுத்து" (திருமுருகு. 204, உரை).

வடம் (ஆலமரம்)- வ. வட (vata). இப் பொருளில் இச் சொற்கு வடமொழியில் வேரில்லை. மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத-ஆங்கில அகரமுதலியில். perhaps Prakrit for vrita surrounded, covered' என்று பொருட்காரணங் கூறியிருத்தலை நோக்குக.

வடம்-வடகு-வடகம் = தாளிப்புத் துணைக் கரணமாக, அரைத்த மாவுடன் கறிச்சரக்குகள் சேர்த்துப் பொரித்து. வெயிலில் உலர்த்திய நறுமண வுருண்டை.

வடகம்-வ. வடக (vataka).

பூசுதல்.

வள்-வர்-வரி. வரிதல் = 1. எழுதுதல் (பிங்.). 2. சித்திரமெழுதுதல். "வல்லோன் றைஇய வரிவனப் புற்ற வல்லிப் பாவை" (புறம். 33). 3 4. மூடுதல். “புண்ணை மறைய வரிந்து" (திவ். திருவாய். 5:1:5). 5. கட்டுதல். "வரிந்த கச்சையன்" (சூளா. சீய. 11).

66

வரித்தல் = 1. எழுதுதல். "வள்ளுகிர் வரித்த சாந்தின் வன்முலை" (சீவக. 2532). 2. சித்திர மெழுதுதல். 3. பூசுதல் (சூடா.). 4. கோலஞ் செய்தல். ‘புன்னை யணிமலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்.117). 5.கட்டுதல். "வரிக்குங் காட்சியிலா வறிவே" (ஞானவா.மாவலி. 48). 6. வரைந்து கொள்ளுதல். 7. திருமணஞ் செய்தல்.

=

வரி = 1. கோடு. "நுண்ணிய வரியொடு திரண்டு" (சீவக. 1702). 2. தொய்யில் வரைவு. "மணிவரி தைஇயும்" (கலித். 76). 3. கைவரை (பிங்.) 4.வரிசை, ஒழுங்கு. "குருகி னெடுவரி பொற்ப" (பதிற். 83 :2). 5. எழுத்து (நாமதீப. 673). 6.நிறம். "வரியணிசுடர் வான்பொய்கை" (பட்டினப். 38). 7. அழகு. "வரிவளை" (பு. வெ. 11 : 12). 8. வடிவு (அக.நி.) 9. இசைவகை. 10. இசைப்பாட்டு. "வரிநவில் கொள்கை" (சிலப். 13 : 38). 11. வரிக்கூத்து. “கண் கூடு வரியும்" (சிலப். 3:14). 12. கடைக்கழக நூல்களுள் ஒன்று (இறை. 1, ப. 5). 13 கட்டு. “வரிச்சிலையாற் றந்த வளம்" (பு. வெ. 1 : 16). 14. குடியிறை (பிங்). 15. நெல். “எடுத்துவரி முற்றத் தினிலிட்டு" (தனிப்பா 1,354 : 41). 16. நீளம் (சூடா.). தெ. வரி, ம. வரெ, க. ரெ. (b).

வரி-வரிசை = 1. ஒழுங்கு (சூடா.). 2. நிரை, தொடர். 3.தகுதி. “வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண். 217). 4. மேம்பாடு. “ஆடுகொள் வரிசைக் கொப்பப் பாடுவல்" (புறம். 53). 5. மதிப்பு. (மரியாதை). "பொற்புற வரிசை செய்வான்" (திருவிளை. இந்திரன்முடி. 37). 6. பாராட்டு. "வரிசைப் பெரும் பாட்டெல்லாம்" (கலித். 85). 7. அரசராற் பெருஞ் சிறப்பு.