உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (இளமைக் கருத்துவேர்)

இளமை என்பது ஓர் உயிரியின் பிறப்பிற்கும் முழு வளர்ச்சிக்கும் டைப்பட்ட நிலைமை அல்லது காலம். அது பிறந்த நிலையினின்று தொடங்கி, புனிற்றிளமை, சிற்றிளமை, பேரிளமை என முந்நிலைப்பட்ட தாகும்.

பிறப்பெனினும் தோற்றமெனினும் ஒக்கும்.

இயற்கையான தோற்றம் அல்லது இயக்கமெல்லாம் முன்னோக்கியே நிகழ்தலால், தோற்றக் கருத்தில் முன்னோக்கல் அல்லது முகங்காட்டற் கருத்து இரண்டறக் கலந்துள்ளது.

இனி, இளமைப் பருவத்திலேயே உருவச் சிறுமையும் உடல் மென்மையும் அழகு நிறைவும் மறவுணர்ச்சியும் வலிமை மிகுதியும் பொதுவாக அமைந்திருத்தலால், இளமைக் கருத்திற் சிறுமை மென்மை அழகு மறம் வலிமை முதலிய கருத்துகளும் தோன்றும்.

முன் முனி

முல் போல்"(நற்.360).

=

யானைக் கன்று. "முனியுடைக் கவனம்

முன் - முன்னி = முல்லை நிலத்தில் இயற்கையாக விளைவும் ஒரு சிறு பயறு. ஒ.நோ: L.Min, small. இதனின்றே, minify, minim, minimum, minish, minor, minute முதலிய பல சொற்கள் திரிந்துள்ளதாகத் தெரிகின்றது.

முல் - முள் முளை = 1. வித்தினின்று முளைத்த சிறு வெளிப்பாடு. "வித்திய வெண்முளை” (ஐங்குறு. 29). 2. இளமை. “முளையமை திங்கள்” (கம்பரா. கும்பக. 10). 3. மரக்கன்று. “அதன்றாள் வழியே முளையோங்குபு” (சீவக 223). 4. சிறுபிள்ளை. 5. மகன். (பிங்.)

ம. முள, து.முளெ, க.மொளெ, தெ. மொலக்க.

=

முளைத்தல் 1. முளை தோன்றுதல். "ஒன்றாய் முளைத்தெழுந்து” (திருவாச. 10 : 8). 2. கதிரவன் தோன்றுதல். “காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப" (மணி. 8 : 18).

ம. முளை, க.மொளே, தெ. மொலத்சு.

முளை முளையான் = சிறுகுழந்தை. இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது. (W.)

முள் முளு - முசு - மூசு = பிஞ்சு. பலாமுசு. (உ.வ.). ஒ.நோ: உளு உசு. ள - ச. போலித்திரிபு.