உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

வேர்ச்சொற் கட்டுரைகள்

முள் - முட்டு. முட்டுக் குரும்பை = சிறு தென்னம் பிஞ்சு, அல்லது பனம் பிஞ்சு.

முட்டு - மொட்டு = அரும்பு. "மொட்டருமலர்" (திருவாச.29 : 8)

மொட்டு - மொட்டை = மணமாகாத இளைஞன் (W.) மொட்டைப் பையன்

(2.01.)

-

முளு முழு முகு - முகிழ். ஒ.நோ: தொழு - தொகு.

முகிழ்த்தல் = (செ.கு.வி.) 1. அரும்புதல். "அருமணி முகிழ்த்தவேபோ விளங்கதிர் முலையும்” (சீவக. 551). 2. தோன்றுதல். "மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே" (ஐந்குறு. கடவுள்). கூம்பும் மலர்போற் குவிதல் அல்லது மூடுதல். "மகவுகண் முகிழ்ப்ப" (கல்லா.7).

(செ.குன்றாவி.) 1. ஈனுதல். “அமரராதியரை முகிழ்த்து” (விநாயகபு. 8: 154). 2. தோற்றுவித்தல். “அற்புத முகிழ்த்தார்" (காஞ்சிப்பு. பன்னிரு. 163). க. முகுள் (g).

முகிழ் = 1. அரும்பு. "குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந் நீட்டார்” (நாலடி. 262). 2. குமிழி. "பெயறுளி முகிழென" (கலித். 56)

முகிழ் முகிழம் = மலரும் பருவத்துப் பேரரும்பு. (சது.).

ய. முகுல

முகிழ் - முகிழி, முகிழித்தல் = முகிழ்த்தல்.

=

முகிழி - முகிழிதம் முகிழ்தம் = அரும்பல், அரும்பு. "பொன்னின் முகிழிதம் விளைத்து” (குற்றா. தல. நாட்டுச். 9).

முகிழ் - முகிள். முகிழம் - முகிளம். முகிழிதம் - முகிளிதம்.

முகிள் - முகுள் முகுளம் -

= 1. அரும்பு. "பங்கய குமுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த” (திவாலவா. 4 : 14). 2. ஒரு கையின் ஐந்து விரலும் நிமிர்ந்து நுளி பொருந்திக் கூம்பி நிற்கும் இணையா விணைக்கை வகை. (சிலப். 3 : 18), உரை.)

வ. முகுல்

முகுளம் - முகுடம் = மணிமுடி. “முகுடமும் பெருஞ் சேனையும்” (பாரத. குரு. 14). 2. முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று. (திவா.).

முகுடம்

- வ. முக்குட்ட.

முகுடம் மகுடம் = 1. மணிமுடி. "அரக்கன்றம் மகுடம்" (கம்பரா. முதற்போ. 246). 2. தேர்க் குப்பம். 3. ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை.

மகுடம் வ. மக்குட்ட

பேரா. பரோ தம் 'சமற்கிருத மொழி' என்னும் நூலின் இறுதியில், முகுடம் (மகுடம்) என்பது திரவிடச் சொல்லென்று குறித்திருத்தல் காண்க.