உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (இளமைக் கருத்துவேர்)

முகிள்

3

முகுளி. முளித்தல் முகுள்

=

குவிதல். "முருளிக்கும்...

அரவிந்தம்” (தண்டி. 62).

முகு - முகை = அரும்பு. "முகை மொக்குளுள்ளது நாற்றம் போல்" (குறள்.

1274).

முகைதல் = அரும்புதல்.

முகு - மொகு - மொக்கு = பூ மொட்டு. 2. மொட்டுப் போற் செய்யப்படும் ஓவிய வேலைப்பாடு. 3. நிலத்தின்மேல் இடும் பூக்கோலம்.

க. மொக்கு (gg.). தெ. மொக்க. (gg.)

மொக்கு- மொக்குள் = 1. மலரும் பருவத்துப் பேரரும்பு. "முகைமொக்கு ளுள்ளது நாற்றம் போல” (குறள். 1274). 2. நீர்க்குமிழி. "படுமழை மொக்குளின்” (நாலடி. 27). க. முகுதல். (g).

மொக்குள் - மொக்குளி மொக்குளித்தல் = 1. குமிழியுண்டாதல். (w). 2. திரளுதல். (யாழ். அக.)

க. முக்குளிசு

முள் - முண் - முண. முணமுணத்தல் = வாய்க்குள் மெல்லப் பேசுதல். "சுற்றிவந்து முணமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா” (சிவவாக. 58).

முண முணு. முணுமுணுத்தல் = வாய்க்குள் மெல்லப் பேசுதல்.

-

முணு முணுக்கு. முணுக்கு முணுக்கெனல் = குழவி தாய்ப்பாலைச் சிறிது சிறிதாக உறிஞ்சிக் குடித்தல்.

முண் - மண்

மணி = சிறியது.

மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்காக்கை, மணிக்குடல், மணிக்கை, மணிக்கோரை, மணித்தக்காளி, மணித்துத்தி, மணிப்புறா, மணிப்பயறு முதலிய கூட்டுச் சொற்களை நோக்குக.

முணுக்கு - முடுக்கு = சிறுசந்து.

முடுக்கு முடுக்கர் = குறுந்தெரு. "முடுக்கரும் வீதியும்" (சிலப். 5 : 187) முடுக்கு முக்கு = சந்து. ம. முக்கு.

முது முகம் = 1. தோற்றம். “சுளிமுகக் களிறன்னான்” (சீவக. 298). 2. முன்பு. ‘ஈன்றாள் முகத்தேயு மின்னாதால்” (குறள். 923). 3. தலையின் முன்புறம். "முகத்தா னமர்ந்தினிது நோக்கி” (குறள். 93). 4. நோக்கு. "புதுமுகம் புரிதல்” (தொல். மெய்ப். 13). 5. முகமன். "முகம்பல பேசி யறியேன்” (தேவா. 742 : 2).6 வீட்டின் முன்புறம். 7. நாடகச்சந்தி ஐந்தனுள் முதலது. (சிலப். 3 : 13 உரை). 8. தொடக்கம். (w). 9. முகத்தில் முன் நீண்டுள்ள மூக்கு.

முகஞ் செய்தல் = 1. தோன்றுதல். "முகஞ்செய் காரிகை" (பெருங். உஞ்சைக். 35 : 49). 2. முன்னாதல். “தோற்றினாண் முகஞ்செய் கோலம்” (சீவக. 675). 3. நோக்குத. “முன்னினான் வடதிசை முகஞ்செய்து" (சீவக. 1408).