உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

வேர்ச்சொற் கட்டுரைகள்

முகக் கொம்பு, முகதலை, முகமண்டபம், முகவாசல், முகவுரை; உரைமுகம், கழிமுகம், துறைமுகம், நூன்முகம், போர் முகம் என்னும் கூட்டுச் சொற்களில், முகம் என்னுஞ் சொல் முன்புறத்தையே குறித்தல் காண்க.

முகமை = 1. முன்மை. 2. தலைமை. அவன் முகமையாயிருந்து கூட்டத்தை நடத்தி வைத்தான். (உ.வ.)

முகம் - முகன் (போலி).

முகம், முகன் - வ. முக (mukha).

முகன் - முகனை = 1. முன்புறம். 2. தொடக்கம். 3. உரைநடைச் சொற்களின் அல்லது செய்யுட்சீர் அடிகளின் முதலெழுத்துகள் ஒத்து வருதல். 4. தலைமை. அவன் முகனை பண்ணுகிறான் (w). 5. அந்நொடியே, நான்வந்த முகனையிலே அவன் போய்விட்டான். (w.). 6. முன்சினம். உனக்கேன் இவ்வளவு முகனை? (உ.வ.)

முகனைக்கல்

உத்தரக்கல்.

=

கோயில் முதலியவற்றில் வாசற்காலின் மேலுள்ள

முகனைக்காரன் = முதலாளி. (w)

முகனை முடிவு = தொடக்க விறுதி. (W.)

முகனை மோனை = 1. முதன்மை. 'மோனை மங்கலத் தியற்றுவ” (உபதேசகா. சிவபுண். 63). 2. செய்ளடியிற் சீர்தொறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. "அடி தொறுந் தலையெழுத்தொப்பது மோனை". (தொல். செய்.

91).

முகம் முகர் = 1. முகம். 2. மூக்கு.

முகர்தல் = மணமறிதல்.

முகர்

மோர்

அளிச்சம்” (குறள். 90).

மோ. மோத்தல் =மணிமறிதல். "மோப்பக் குழையும்

மோ - மோப்பு -மோப்பம்

=

பணமுகர்வு.

முகர் - முகரி = 1. தொடக்கம். 2. முன்புறம். 3. தலைமை. 4. மூக்கின் அடி. முகரிமை 1. தலைமை. “முகரிமை யடைந்தவன் தோல் முகத்தவன்” (கந்தபு. கயமுகனுற். 49). 2. பேரறிவு. (பிங்.) "முகரிமைசால் நற்றவர்" (சேதுபு. பலதீ. 30).

முகர் - முகரை = 1. பழிக்கப்படும் முகம். அவன் முகரையைப் பார் எப்படி யிருக்கிறதென்று (உ.வ.). மூக்கினடி. "முகவுரையா லுழுத தொய்யில்” (திருக்காளத். பு. கண்ணப்ப. 3). மு.

இந்த. முக்ரா (mukhra).

முகரை - மோரை = 1. பழிக்கப்படும் முகம். 2. முகவாய்க்கட்டை தெ. மோர, க. மோரெ.