உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (இளமைக் கருத்துவேர்)

5

முகவாய் - மோவாய் முகத்தில் வாய்க்குக் கீழுள்ள நாடி. “குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய்" (புறம். 257).

-

முகு முக முகப்பு = 1. முற்பகுதி. 2. வீட்டின் முன்புறக் கட்டிடம். “முகத்தணிந்த முகப்பு" (அரிச். பு. இந்திர. 20). 3. அணிகலங்களின் முன்புறப் பொருத்துவாய். 4. சேலையின் முகதலை. 5.முன்னிலை. "இருந்திடா யெங்கள்கண் முகப்பே" (திவ். திருவாய் 9 : 2 : 7).

முள் - மள் - மள்ளன் மள்ளன் = 1. இளைஞன். “பொருவிறல் மள்ள” (திருமுருகு. 262). 2. மறவன், படைமறவன். “களம்புகு மள்ளர்” (கலித். 106). 3. குறிஞ்சிநில வாணர். (சூடா.)

மள் மள மழ = 1. இளமை. “மழவும் குழவும் இளமைப் பொருள' (தொல். உரி. 14). 2. குழந்தை. “அழுமழப் போலும்” (திருக்கோ. 147).

மழ மழவு = 1. இளமை. 2. குழந்தை.

மழவு மழவன் = 1. இளஞன். 'மழவர்த மனையன மணவொலி" (கம்பரா. நாட்டுப். 50)

மழ - மழம் மழல் மழலை = 1. இளமை. "பெருமழலை வெள்ளேற்றினர்" (தேவா. 570 : 5). 2. குழந்தைகளின் இனிய, திருந்தாச் சொல். 'தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்” (குறள். 66).

-

மழ மழம் மடம் = 1. இளமை. “அஞ்சன் மடவனமே" (நள. சுயம். 27). 2. இளமைக்குரிய மென்மை. “தெளிநடை மடப்பிணை” (புறம். 23). 3. இளமைக்குரிய அழகு. "மடக்கணீர் சோரும்” (சிலப். 17, உரைப்பாட்டு மடை). 4. ளமைக்குரிய அறியாமை. "கொடை மடம் படுதலல்லது படைமடம் படான்” (புறம். 142). 5. பெண்பாற் குணம் நான்கனுள் ஒன்றான (கொளுத்தக் கொண்டு காண்டது விடாமையாகிய ) பேதைமை. "வாலிழை

மடமங்கையர்" (புறம். 11).

106).

67).

-

மழ மட மடப்பு மடப்பம் = 1. மென்மை. 2. இணக்கம். 3. பேதைமை.

மடம்

மடவன் = அறிவிலான். "மடவர் மெல்லியர் செல்லினும்' (புறம்.

மடவள் = அறிவிலாள். "மடவ ளம்மநீ யினிக்கொண் டோளே” (ஐந்குறு.

மடவாள் = பெண். “குழன் மடவாள் கூறுடையாளொரு பாகம்" (திருவாச.

5:17).

மடவி = பெண். "மடவியரைச் சிந்தை விருப்பறா செய்வித்தல்” (கொக்கோ. பாயி. 12).

மடம் மடந்தை = 1. பெண். “இடைக்குல மடந்தை” (சிலப். 16 : 2). 2. பதினான்கு முதல் பத்தொன்பது அகவை வரையப்பட்ட பெண். (பிங்.).