உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

தெ. மடத்தி, க. மடதி.

வேர்ச்சொற் கட்டுரைகள்

மடம்வால் - மடவரல் = 1. மடப்பம். “மடவர லுண்கண் வாணுதல் விறலி” (புறம். 89). 2. பெண். "மடவரனோக்கம்" (குறள். 1085).

மடமை மடைமை = அறியாமை.

மடையன் = அறிவிலி.

மழ - மக = 1. இளமை. (யாழ். அக.)2. 2.பிள்ளை. "மந்திம்மக” (சீவக. 1897). 3. மகன் அல்லது மகள். "மகமுறை தடுப்ப." (மலைபடு: 185).

க. மக. (g).

மழவு மகவு = 1. குழந்தை. "மகவுமுலை வருட" (கம்பரா. தைல். 13). 2. மகன் 'கொண்டதோர் மகவினாசை" (அரிச். பு. மயான. 20). 3. மரத்தில் வாழும் விலங்கின் குட்டி.

"கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப." (தொல். மர. 13).

'மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்

அவையும் அன்ன அப்பா லான' (மேற்படி. 14)

க.மகவு (g).

மக - மகன் = 1. குழந்தை. (w). 2. ஆண்பிள்ளை. “செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள். 110). 3. புதல்வன். “மகன்தா யுயர்பும்" (தொல். கற். 33). 4. சிறந்தோன். “நூல் கற்ற மகன்றுணையா நல்ல கொளல்" (நாலடி. 136). 5. போர் மறவன். 'வேந்தன் மனம்போல வந்த மகன்" (பு.வெ. 2 : 5). 6. கணவன்."நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம்” (மணி. 21 :29).7. விளையாடும் பருவத்துப் பெண் பெயரீறு. “பெண்மை யடுத்த மகனென் கிளவியும்” (தொல். பெய. 11)

"புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை, மாறோக்கத்தார் இக் காலத்தும் பெண்மகனென்று வழங்குப." (சேனா.உரை.). மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு.

க. மகம் (g)

ஒ.நோ: mac (mak). A. Gaelic word signifying so, and prefixed to many surnames, as Mac Donald, Mac Grigor, & c. It is synonymous with Son in tentonic origin.... and with mab or Map (shortened into Ab or Ap) in Webh names. It is allied to Goth. magus, a son fen, magaths (G. magd, a maid.).

- The Imperial Dictionary of the English Language.

மக - மகள் = 1. பெண். “ஆயமகணீ யாயின்” (கலித். 107). 2. புதல்வி. "நல்கூர்ந்தாள் செல் மகள்" (கலித். 56). 3. மனைவி. "மனக்கினி. யார்க்கு நீ மகளாயதூஉம்" 9மணி. 21 : 30). 4. பெண் தெய்வம். எ-டு: திருமகள். 5. தெய்வத்தாய். எ-டு: நிலமகள்.

ம.மகள், க. மகள் (g).