உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (இளமைக் கருத்துவேர்)

மகள் - மகடு = 1. பெண். 2. மனைவி. (அகு.நி.).

7

மகடு - மகடூஉ = 1. பெண். "ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” (தொல். கிளவி. 6). 2. மனைவி. "இற்பொலி மகடூஉப் போல" (புறம். 331).

ஒ.நோ:

வ. மஹிலா = பெண்டு, பெண்

மஹீலா = பெண்டு

மஹேலா = பெண்டு

மஹேலிகா = பெண்டு.

மகளிர் மன்றம் மஹில சங்க எனப்படுகின்றது.

மகள் என்னும் சொல்லே மஹில என்று திரிந்திருத்தல் வேண்டும். மஹிலா என்னும் சொல்லிற்குக் காட்டப்படும் மூலம் மஹ் என்பதே. அம் மூலத்திற்கு மகிழ் அல்லது மிகு என்பது பொருளாகக் கூறப்படுகின்றது. அதுவே பொருளாயின், அதுவும் மஹிலா என்பது தமிழ்ச் சொற்றிபென்பதற்குச் சான்றாதல் காண்க.

மகார் = 1. புதல்வர். “அவுணர்கோன் மகார்" (கந்தபு. மூவாயிர.58). 2. சிறுபிள்ளைகள். "இளந்துணை மகாரின்" (பதிற்றுப். 71: 7).

மகன் மான் (ஆண்பாற் பெயரீறு)

எ-டு: திருமகன் - திருமான், கருமகன் - கருமான், பெருமகன் பெருமான், மருமகன் - மருமான், சேரமான், வெளிமான்.

மகள் மாள் (பெண்பாற் பெயரீறு)

எ-டு: பெருமகள் பெருமாள் -பெருமா (கொச்சை); வேண்மாள். மகர் -மார் (பலர்பாற் பெயரீறு).

எ-டு: அண்ணன்மார், ஆசிரியன்மார்.

மழலை - மதலை = 1. குழந்தை. 2. மகன். (பிங்.). "மதலை யிற்றமை கேட்டலும்” (சேதுபு. அக்கினி. 82).

மதலைக் கிளி = இளங்கிளி. "மதலைக் கிளியின் மழலைப் பாடலும்” (பெருங். உஞ்சைக். 48 : 164).

= 1.

முள் முரு முருகு இளமை. (திவா. 2. அழகு. (பிங்.). 3. குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகன். "அருங்கடி வேலன் முருகொடு வளைஇ” (மதுரைக். 611). 4. தெய்வம். "முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல” (புறம். 259). 5. வேலன் வெறியாட்டு. "முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்” (குறுந். 362). 6. திருவிழா. (திவா.) "முருகயர் பாணியும்" (சூளா. நாட். 7). 7. படையல் விருந்து. "படையோர்க்கு முரகயா” (மதுரைக். 38). 8. திருமுருகாற்றுப்படை. "முருகு பொருநாறு" (தனிப்பா.).

முருகு - முருகன் = 1. கட்டிளைஞன். (திவா.). 2. குமரன் என்னும் குறிஞ்சிநிலத் தெய்வம். 3. வெறியாடும் வேலன் "முதியாளோடு முரகனை முறையிற் கூவி” (கந்தபு. வள்ளி. 155). 4. பாலைநிலத் தலைவன். (அரு. நி.).