உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வல்' (வளைவுக் கருத்துவேர்)

வரணி – வ. வர்ண்.

107

வரணி என்பதை வர்ணி யென்றோ வருணி யென்றோ தமிழில்

எழுதுவது தவறாகும்.

வரணி-வரணனை = புனைந்துரைப்பு. 'அனை' ஈறு.

வரணனை-வ. வர்ணனா.

வண்ணம், வண்ணி, வண்ணனை, வண்ணகம், வண்ணக்கன் என்னும் வடிவங்கள் வடமொழியிற் புகவில்லை.

மறைத்தற் கருத்தும் எழுதுதற் கருத்தும் வரணித்தற் கருத்தும் வளைதற் கருத்தொடு தொடர்புள்ளவையே. ஆதலால், சூழ்தலும் மறைத்தலும்பற்றிய சொல்லை வேறாகவும், நிறமும் வண்ணனையும் பற்றிய சொல்லை வேறாகவும் தமிழிற் பிரித்தல் கூடாது. எழுதுதல் என்பது வண்ணவோவியம் வரைதலையும் குறிக்கும். வண்ண அல்லது நிறக்கருத்தினின்றே குலம், இசை, வண்ணனை முதலிய கருத்துகள் கிளைத்துள்ளன. எழுத்தும் வண்ணப்படமும் பெரும்பாலும் வளைத்தே எழுதவும் வரையவும் படுவதை இன்றுங் காண்க.

வரி (வரை)-வரந்து-வரந்தை = எல்லை, ஓரம்.

வரந்து-வரத்து = எல்லை. "இந் நாயனார் திருப்பதியில் நாலு வரத்துக்குள்ளும் இருந்த குடிமக்களை" (Pudu. Insc. 176).

வரி-வரம்பு = எல்லை. வரம்பு-வரப்பு = வயல் வரம்பான திட்டு.

வரி-வரை. வரைதல் = 1. எழுதுதல். 2. சித்திரம் எழுதுதல். 3. கோடிட்டு எல்லை குறித்தல். 4. அளவு படுத்துதல். "வரையாப் பூச லொண்ணுதன் மகளிர்” (புறம் 25). திட்டஞ் செய்தல். (புகழொடுங் கழிகநம் வரைந்த நாளென் (மலைபடு. 557). 6. அடக்குதல். “வரைகிலேன் புலன்க ளைந்தும்" (தேவா. 631:1). 7. விலக்குதல். "உருவுகொளல் வரையார்" (தொல். எழுத்து. 41). 8. கைவிடுதல். "கொள்கலம் வரைதலின்" (கலித். 133). 9. மறுத்தல், வரிசையறிதல். "கொடைமட மென்ப தம்ம வரையாது கொடுத்த லாமே" (சூடா.). 10. நேர்மைவழியில் ஈட்டுதல். “வரைபொருள் வேட்கையேன்" (சிலப்.10 :51). 11. தனக்குரியதாக்குதல். "அறன்வரையான்” (குறள். 150). 12. மணஞ்செய்தல். “வெளிப்பட வரைதல் படாமை வரைதல்" (தொல்.களவு.49). வரை (எழுது) - தெ. வ்ராயு.

வரை = 1. கோடு. 2.வரி (இரேகை). 3. எழுத்து (பிங்.) 4. கணுவரையுள்ள மூங்கில். “மால்வரை நிவந்த வெற்பின்” (திருமுருகு.12). 5. சுவர்போல் நிலத்தை வரையறுக்கும் மலை. "பனிபடு நெடுவரை (புறம். 6.). 6. எல்லை. "வௗவரை” (குறள். 480). 7. சிறுவரம்பு (W) 8. நீர்க்கரை (சூடா.) 9. அளவு. “உளவரை” (குறள். 480). 10 காலவரம்பு, காலம் “சிறுவரை" (பு. வெ. 12, பெண்பாற். 17). 11. இடவரம்பு. இடம். "மலைவரை மாலை" (பரிபா. 10 : 1).