உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

வேர்ச்சொற் கட்டுரைகள்

மட்டுணர்த்தும் சொல். வரை, வரையும், வரைக்கும்.

வரை – வரைப்பு = 1. எழுதுகை. “வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்” (பெருங். உஞ்சைக். 34:168). 2. எல்லை. “இடைநில வரைப்பின்” (மணிமே. 28:24). 3. மதில். "அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய” (பட்டினப். 269). 4. வரைந்துகொள்ளப்பட்ட இடம். "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்" (தொல். செய். 78). 5. சுவர் சூழ்ந்த இடம் (சீவக. 949, உரை.). 6. மாளிகை. “துணையொடு திளைக்குங் காப்புடை வரைப்பின்” (அகம். 34). 7. குளம். “புனல் வரைப்பகம் புகுந்தோறும்" (பொருந. 240). 8. ஞாலம், உலகம். "தண்கடல் வரைப்பில்" (பெரும்பாண். 18).

வள்-வர்-வார். வார்தல் = சாய்தல், வளைதல்.

=

வார்-வாரம் = 1. சரிவாயிருக்கும் மலைச்சாரல். “வாரம தெங்கும் பண்டி களூர” (இரகு.திக்கு. 258). 2. சாய்வா யிருக்கும் தாழ்வாரம்.

வார்-வாரி = 1. மதிற்சுற்று. "வடவரை நிவப்பிற் சூழ வாரியாப் புரிவித்து" (கந்தபு. அசுரர்யாக. 36). 2. செண்டுவெளி. "குஞ்சரம் வாரியுள் வளைத்தவே” (சீவக. 275). 3. நிலஞ் சூழ்ந்த கடல் (பிங்.).

வாரி (கடல்). வ வாரி L. mare.

வார்-வாரணம் = 1. வளைவு, சூழ்வு. 2. வட்டமான கேடகம் (W). 3. உள்வளைந்த சங்கு (பிங்.). 4 நிலஞ்சூழ்ந்த கடல். 5. சூழ்வதால் அல்லது சுற்றி மூடுவதால் ஏற்படும் மறைப்பு. "வாரண மாயை” (பாரத. திரௌ. 17). 6. தடை. 7. கவசம் (பிங்.).8. சட்டை (சூடா.). 9. காப்பு (W.).

வாரணம் (கடல்)-வ. வாருண, L. marinus.

வள்-வாள் = வளைவு.

= வளைவு. வாள் வரி = வேங்கைப்புலி. "மதகரிக் களபமும் வாள்வரிப் பறழும்" (சிலப். 25 : 49)

வாள்-வாளம்

= வட்டம். "வாள மாகவோர் பவளமால் வரை...வளைந்தென்ன” (பாரத. காண்டவ. 11). 2. சக்கரவாள மலைத்தொடர் (யாழ். அக.). 3. சக்கரவாகப்பறவை. "மங்கைமார் தடமுலையெனப் பொலிவன வாளம்" (கம்பரா . பம்பை. 21).

வாளம்-வ. வால்.

வாள்-வாளி = 1. வளையமான மூக்கணி. 2. வளையமான காதணி. “வாளி முத்தும்" (குமர. பிர. முத்து. பிள். 11).

வாளி-வ. வாலீ.

வாளி - வாளிகை = சிறு காது வளையம். "சுட்டிகையும் வாளிகையும்" (பதினொ. திருக்கைலாய. 68).

வாளிகை-வ. வாலிகா.

வாளி = வட்டமாயோடுகை. “வாளி வெம்பரி” (பாரத. குரு. 108).